பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

advanced controls

56

advanced RISC computing


மொழியை மேம்படுத்தி உரு வாக்கப்பட்ட கணினி மொழி.

advanced controls : உயர் நிலை இயக்கு விசைகள்.

advanced course : உயர் நிலைப் பாடத்திட்டம்.

Advanced Digit Network : உயர் நிலை இலக்கமுறைப் பிணையம் : தரவு ஒளிக் காட்சி (Video) மற்றும் ஏனைய இலக்க முறை சமிக்கைகளை மிகவும் நம்பகத் தன்மையுடன் அனுப்பும் திறன்வாய்ந்த தனி தடச் சேவை. தரவுத் தொடர்பு நிறுவனங்கள் சிறப்புச் சேவையாக இதனை வழங்குகின்றன. இத்தகைய உயர்நிலைப் பிணையங்களில், பெரும்பாலும் வினாடிக்கு 56 கிலோ (துண்மி) பிட்டுக்கு அதிகமான வேகத்தில் தரவுப் பரிமாற்றம் நடைபெறும்.

advanced filter : உயர்நிலை வடிகட்டி,

advanced interactive executive : உயர்நிலை இடைப் பரிமாற்ற நிர்வாகி.

advanced power management : உயர்நிலை மின்சார மேலாண்மை : கணினி அமைப்புகளில் குறிப்பாக, மின்கலன்களால் இயங்குகின்ற மடிக் கணினிகளில் மின்சாரத்தைச் சிக்கனமாகச் செலவழிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு பயன்பாட்டு நிரலாக்க இடைமுகம் (API). மைக்ரோ சாஃப்ட் மற்றும் இன்டெல் நிறுவனங்கள் இணைந்து இதனை உருவாக்கியுள்ளன. கணினி இயக்க நிலையில் நாம் பணியாற்றாமல் இருக்கின்ற போது, கணினியின் பாகங்கள் (தாய்ப்பலகை, செயலி, நிலைவட்டு, திரையகம்) மிகக் குறைந்த மின்சாரத்தையே எடுத்துக் கொள்ளும்படி இந்த நிரல் கட்டுப்படுத்தும்.

Advanced RISC : உயர்நிலை ரிஸ்க் : குறைந்த நிரல் தொகுதிக் கணினிப் பணி (Reduced Instruction Set Computing) என்பதை கருக்கமாக ரிஸ்க் (RISC) என்று அழைக்கின்றனர். துண் செயலி வடிவாக்கத்தில் பயன்படுத்தப்படும் தொழில் நுட்பத்தை இது குறிக்கிறது. மிப்ஸ் கம்ப்யூட்டர் சிஸ்டம்ஸ் நிறுவனம், பல்வேறு மென்பொருள் பயன்பாடுகளுக்கு இடையே இரும ஒத்தியில்பை (binary compatibility) ஏற்படுத்தும் வண்ணம் ரிஸ்க் கட்டமைப்பு மற்றும் பணிச் சூழலுக்கென உருவாக்கிய வரையறுப்பு, உயர் நிலை ரிஸ்க் எனப்படுகிறது.

advanced RISC computing specification : உயர்நிலை ரிஸ்க் கணிப்பணி வரையறுப்புகள் :