பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/572

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

father file

571

fatware


செய்ய எம்எஸ்-டாஸில் மேற்கொள்ளப்படும் முறைமை. கோப்பு ஒதுக்கீட்டு அட்டவணை என்று பொருள்படும் File Allocation Table என்பதன் சுருக்கமே FAT எனப்படுகிறது. ஒரு வட்டினை வடிவாக்கம் (Format) செய்யும்போது எம்எஸ்-டாஸ் அவ்வட்டில் ஒரு தரவு கட்டமைப்பை (Data Structure) உருவாக்குகிறது. ஒரு கோப்பினை வட்டில் சேமிக்கும்போது, சேமித்த கோப்பின் விவரங்களை எம்எஸ்டாஸ் ஃபேட்டில் எழுதிக்கொள்ளும். பின்னாளில் ஃபைலின் விவரங்களைப் பயனாளர் கோரும்போது, டாஸ், ஃபேட்டின் உதவியுடன் ஃபைல் விவரங்களைக் கொணர்ந்து தரும். டாஸ் ஃபேட் கோப்பு முறைமையை மட்டுமே பயன்படுத்த முடியும். ஒஎஸ்/2, விண்டோஸ் என்டி மற்றும் விண்டோஸ் 98 ஆகியவை தமக்கேயுரிய கோப்பு முறைமைகளை (முறையே HPFS, NTFS, VFAT) பின்பற்றுவதுடன் ஃபேட் முறைமையை ஏற்றுக்கொள்ளவும் செய்கின்றன.

father file : தந்தை கோப்பு : மூலப்பதிவேட்டின் ஒரு நகலையும் வைத்துக்கொண்டு திருத்தப்பட்ட பதிப்பையும் தருகின்ற வகையில் பதிவேடுகளைப்புதுப்பிக்கும் அமைப்பு. ஒரு கோப்பினைப் புதுப்பிக்கும் பணி நடைபெறும்போது பழைய மூல கோப்பை 'தந்தை கோப்பு' என்கிறோம். தந்தை கோப்பை உருவாக்கும் கோப்பு 'தாத்தா கோப்பு'. வட்டு அல்லது நாடா போன்ற மின்காந்த ஊடகத்தில் வைக்கப்பட்டுள்ள கோப்புகளுக்கு இத்தொழில் நுட்பம் மிகவும் பொருத்தமானது.

fat server கொழுத்த வழங்கன்; கொழுத்த சேவையகம் : ஒரு கிளையன்/வழங்கன் கட்டமைப்பில் செயல்படும் வழங்கன் கணினி. ஏறத்தாழ அனைத்துச் செயலாக்கப் பணிகளையும் வழங்கன் கணினியே மேற் ள்ளும். கிளையன் மிகச் ல பணிகளையே செய்யும். அல்லது எப்பணியும் செய்யாது. பயன்பாட்டு நிரல்கள் மற்றும் தரவு, வழங்கன் கணினி லேயே இருக்கும். தகவலைப் பெற்று வெளியிடும் பணி யே கிளையன் செய்யும்.

fatware : கொழுத்த மென் பொருள் : திறனற்ற மோசமான வடிவமைப்பு, அரிதாகப் பயன்படுத்தப்படும் ஏராளமான தேவையற்ற வசதிகள் இவற்றின் காரணமாக, நிலைவட்டில் அதிகமான இடத்தை ஆக்கிரமித்துக் கொள்ளும் மென்பொருள்.