பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/573

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

fault

572

favourites folder


fault : கோளாறு, பழுது : வடிவமைக்கப்பட்ட விதிமுறைகளின்படி செயல்பட முடியாமல் தடுக்கும் நிலை. பிரிந்தகம் அல்லது அரை மின்சுற்று போன்றவை ஒரு துணை பாகத்திலோ, கணினியிலோ அல்லது வெளிப்புற உறுப்பிலோ செயல்பட முடியாமையை ஏற்படுத்தல். Error and Mistake என்பதற்கு எதிர்ச்சொல்.

fault tolerance : பழுது தாங்கு திறன் : வன்பொருள் அல்லது மென்பொருள் கோளாறுகள் இருந்தபோதும் வடிவமைப்பு விதிமுறைகளின்படி ஒரு கணினி அமைப்பு தன் பணிகளைச் செய்யும் திறன். கோளாறின்போது இயங்கி அதே வேளையில் சரிவர செயல் படவில்லையென்றால் பாதி அல்லது ஒரளவு கோளாறு தாங்கும் திறனுடையது என்று சொல்லலாம். கூடுதல் வன் பொருள், மென்பொருள் அல்லது இந்த இரண்டின் இணைப்பின் மூலம் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்படுகிறது.

fault tolerance level : பழுது தாங்கு திறன் மட்டம், பழுது சகிப்பு நிலை.

fault-tolerant computer systems : பழுது சகிப்புக் கணினிப் பொறியமைவு : பன்முக மையச் செய்முறைப்படுத்தி, பொறியமைவு மென்பொருள் ஆகியவையுடைய கணினிகள். இவை, ஒரு முக்கியமான வன்பொருள் அல்லது மென்பொருள் செய லிழந்தாலுங்கூட செயற்பாடுகள் தொடர்ந்து நடைபெறுமாறு செய்கின்றன.

favorite : கவர்வி; ஈர்ப்பி; விருப்பமான விருப்பத்தளங்கள்; விரும்பும் பக்கம் : இணையத்தில் பயனாளர் ஒருவர் அடிக்கடி விரும்பிப் பார்க்கும் வலைப் பக்கம், மைக்ரோசாஃப்ட் இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் இவ்வாறு அழைக்கப்படுகிறது. அடிக்கடி பார்க்க விரும்பும் பக்கத்துக்கு ஒரு குறுவழியை (Shortcut) பயனாளர் தாமாகவே அமைத்துக் கொள்ள முடியும். நெட்ஸ்கேப் நேவிக்கேட்டரில் இத்தகைய பக்கத்துக்கு புத்தகக்குறி (Book Mark) என்று பெயர்.

favourites folder : கவர்விகள் : கோப்புறை : அடிக்கடி பார்க்க விரும்பும் வலைப்பக்கங்களுக்கான குறுவழிகளடங்கிய கோப்புறை. மைக்ரோசாஃப்ட் இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் இத்தகைய பெயர். பிற உலாவிகளில் புத்தகக் குறிகள் (Book Marks), சூடான பட்டியல்