பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/575

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

fax programme

574

F connector


பினை தொலைநகலிக்கு அல்லது தரவு மோடெமுக்கு வழிச் செலுத்துகிற ஒரு தொலைநகல் செய்தி விசையினை உள்ளடக்கியிருக்கிறது.

fax programme : தொலைநகலி செயல்முறை; தொலைநகலி கட்டளைத்தொடர்; தொலை நகலி நிரல்.

fax server : தொலைநகல் வழங்கன்.

fax switch : தொலைநகல் விசை : ஒரு தொலைநகல் குறியீட்டுக்காக ஒரு தொலைபேசிக் கம்பியினை சோதனை செய்து, தொலைநகல் எந்திரத்துக்கு அழைப்பினைச் செலுத்துகிற சாதனம். ஒரு தொலைநகல் எந்திரம் ஒர் எண்ணைச் சுழற்றி, அதற்கு அந்த இணைப்பு பதிலளிக்கும்போது, அது தன்னை அடையாளம் காட்டுவதற்கு ஒரு தொனியை வெளிப்படுத்துகிறது. சில சாதனங்களில், குரல் தொலை நகல் தரவு வகையைக் கையாள்கின்றன. இதனை மாற்றுவதற்கு ஒரு விரிவாக்க எண்ணில் விசை இயக்கம் தேவைப்படும்.

FCB : எஃப்சிபி : 'கோப்புக் கட்டுப்பாட்டுத் தொகுதி' என்று பொருள்படும் "File Control Block" என்பதன் தலைப்பெழுத்து குறும்பெயர்.

FCC : எஃப்சிபி : Federal Communications Commission என்பதன் குறும்பெயர். அமெரிக்க அரசின் நிறுவனமாகிய இது மாநிலங்களுக்கிடையிலான தரவுத் தொடர்புகளையும், பொதுத் தரவு போக்குவரத்து வழித்தடங்களையும், ஒலிபரப்பு ஊடகங் களையும் (Media) ஒழுங்குபடுத்தும் பொறுப்பேற்றுள்ளது.

F connector : எஃப் இணைப்பி : ஒளிக்காட்சி (Video) பயன்பாடுகளில் பெருமளவு பயன்படுத்தப்படும் ஒர் இணையச்சு (Coaxial) இணைப்பி. இணைக்கும்போது திருப்பாணி (Screw) ஒன்று தேவை.

எஃப் இணைப்பி