பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/576

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

FDDI

575

feathering


FDDI : எஃப்டிடிஐ : ஒளியிழை பகிர்ந்தமை தரவு இடைமுகம் என்று பொருள்படும் Fiber Distributed Data Interface என்ற சொல்தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். அதிவேக ஒளியிழை குறும்பரப்புப் பிணையங்களுக்காக அமெரிக்க தேசிய தரக்கட்டுப்பாட்டு நிறுவனம் (ANSI) உருவாக்கிய செந்தரம். வில்லை வளைய (Token Ring) கட்டமைப்பில் அமைந்த பிணையங்களில் வினாடிக்கு 100 மெகா துண்மிகள் (மெகா பிட்ஸ்) வீதம் தரவு பரிமாற்றம் செய்வதற்கான வரையறுப்புகள் இதில் அடங்கியுள்ளன. எஃப்டி டிஐ-II என்பது எஃப். டி. டி. ஐ-ன் நீட்டித்த வடிவமாகும். நிகழ் நேரத் தரவு பரிமாற்றத்தில் தொடர்முறைத் தகவலை இலக்க முறைத் தரவு வடிவத்தில் அனுப்புவதற்குரிய கூடுதலான வரையறுப்புகள் இதில் உள்ளன.

FDM எஃப்டிஎம் : அலைப் பகிர்வுச் சேர்ப்புமுறை என்று பொருள்படும் Frequency Division Multiplexing என்ற சொல்தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஒன்றுக்கு மேற்பட்ட தரவு சமிக்கைகளை வெவ்வேறு அலைவரிசைக்கு மாற்றிப் பின் அனைத்து அலை வரிசைகளையும் ஒற்றை அலைக்கற்றையாக்கி ஒரே தரவு தடத்தில் அனுப்பிவைக்கும் முறை. அடிக்கற்றைப் (Baseband) பிணையங்களிலும், தொலைபேசி வழித் தரவு தொடர்பிலும் தொடர்முறை (Analog) சமிக்கைப் பரிமாற்றத்திலும் எஃப்டிஎம் பயன்படுகிறது. எஃப்டிஎம் முறையில் தரவுத் தடத்தின் அலைக்கற்றை சிறுசிறு கற்றையாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு கற்றையும் ஒரு தரவு சமிக்கைகளை ஏந்திச் செல்லும்.

FE : எஃப் இ : Field Engineer என்பதன் குறும்பெயர்.

feasibility study : சாத்தியக்கூறு : இயலுமை ஆய்வு : மாற்றுத் தீர்வுகள், செயல்முறை பரிந்துரைகள், செயல் திட்டத்துடன் ஒரு தரவு செயலாக்கச் சிக்கலை வரையறுத்து கணினி அமைப்பை வடிவமைத்து நிறுவுவதுபற்றிய ஆய்வு "Preliminary Study', 'Systems Study' என்றும் அழைக்கப்படுகிறது.

feathering : இறகிணைப்பு : ஒரு பக்கத்தில் அல்லது பத்தியிலுள்ள ஒவ்வொரு கோட்டுக் கிடையிலும் செங்குத்து வரிச் சரியமைவினை ஏற்படுத்துவதற்காகச் சரிநிகரான இடைவெளியைச் சேர்த்தல்.