பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/579

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

female connector

578

ferric oxide


கணக்கிடும் எந்திரத்தை உருவாக்கினார். இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர், காம்ப்டோ மீட்டர் என்னும் பயன்படுத்தக் கூடிய காட்டும், பட்டியலிடும் எந்திரத்தை உருவாக்கினார்.

female connector : துளை இணைப்பி : இணைப்பி சாதனத்தில் வேறொரு பகுதி சேரக்கூடிய எஞ்சியுள்ள பகுதி.

துளை இணைப்பி

துளை இணைப்பி

Male connector-க்கு எதிர்ச்சொல்.

femto : ஃபெம்ட்டோ : மில்லியனில் அல்லது ஒரு குவாட்ரில்லியனில் ஒரு பகுதி என்பதன் முன்சொல், 10-15.

femtosecond : ஃபெம்ட்டோ நொடி : ஒரு நொடியின் குவாட்ரில்லியனில் ஒன்று. 30 மில்லியன் ஆண்டுகளுக்கு எத்தனை நொடிகள் உண்டோ அத்தனை ஒரு நொடிக்கும் உண்டு. 1 -ஐ அடுத்து வரும் 15 சுழி (பூஜ் யம்) கள். 1, 000, 000, 000, 000, 000. இரண்டு நொடிகளில் ஒளி பூமியில் இருந்து நிலவைக் கடந்து செல்கிறது. 12 ஃபெம்ட்டோ நொடிகளில், அது ஐந்து மைக்ரான்கள் மட்டுமே நகர்கிறது. ஒரு மனித முடியின் அகலத்தில் பத்தில் ஒரு பங்கு. FS என்று சுருக்கி அழைக்கப்படுகிறது.

ferric core : அய உட்புரி : வளைய வடிவிலுள்ள காந்தத் துண்டு. இது ஒர் ஊசித் தலையின் அளவுக்கு அல்லது அதற்குச் சிறிதாக இருக்கும். ஒரு இரும்புச் சலாகைக்கு வடமுனை தென்முனை அல்லது தென்முனை வடமுனை என்று காந்தமேற்றுதல் போன்று ஒரு வளையத்திற்கும் வலஞ்சுழியாக அல்லது இடஞ்சுழியாகக் காந்த மேற்றலாம். இது ஈரிலக்க '0'-களையும் 1 - களையும் சேமித்து வைக்க உதவுகிறது. ஒரு கணினியின் உள்மையச் சேமிப்பியை உருவாக்குவதற்கு இத்தகைய உட்புரிகள் அமைக்கப்படுகின்றன.

ferric oxide (Fe

2 O3) : அய ஆக்சைடு (Fe2 O3) : மின்காந்த வட்டுகளிலும் நாடாக்களிலுமுள்ள பூச்சுகளில் பயன்படுத்தப்படும் இரும்பின் ஆக்சி கரணி.