பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

advanced SCSI

57

AFK



ரிஸ்க் செயலி அடிப்படையிலான ஒரு கணினி, உயர் நிலைக் கணிப் பணி பணித்தளத்தரத்தை எட்டுவதற்குரிய குறைந்த அளவு மென்பொருள் தேவைகள்.


advanced SCSI programming interface : உயர்நிலை ஸ்கஸ்ஸி நிரலாக்க இடைமுகம் : ஸ்கஸ்ஸி புறவன் தகவி (host adapter) களுக்குக் கட்டளைகளை அனுப்புவதற்கு, அடாப்டெக் நிறுவனம் உருவாக்கிய ஒர் இடைமுக வரையறுப்பு (interface specification). இந்த இடை முகம், நிரலுக்கு ஒரு கருத்தியல் அடுக்கினை (abstraction layer) வழங்குகிறது. எத்தகைய தகவி பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதைப்பற்றி நிரலர் கவலைப் படத் தேவையில்லை.


advanced search : மேம்பட்ட தேடல்.


AEDS : ஏஇடிஎஸ் : 'கல்வி தரவு முறைமைக்கான சங்கம்' எனப் பொருள்படும் Association for Educational Data System என்பதன் குறும் பெயர். கல்வியின் எல்லா நிலைகளிலும் ஆசிரியர் மற்றும் தரவு பணியில் ஈடு பட்டிருப்பவர்களுக்குச் சேவை செய்யும் லாப நோக்கமற்ற தனியார் நிறுவனம். நவீனக் கல்விக்கும் நவீனத் தொழில் துணுக்கத்திற்கும் இடையிலான உறவைப் பற்றிய கருத்துகளை தரவுகளைப் பரிமாற்றிக் கொள்ள ஒரு அரங்கத்தை வழங்குகிறது. ஆண்டுக்கொரு முறை மாநாடு, தேசிய வட்டார, உள்ளுர் பயிலரங்குகளை நடத்துகிறது. மேனிலைப் பள்ளி மாணவர்களுக்காகக் கணினி செயல்முறைப் போட்டி ஒன்றை நடத்துகிறது. காலாண்டு அறிக்கை, சஞ்சிகை ஆகியவற்றை வெளியிடுகிறது.


AFCET : ஏஎஃப்சிஇடிடீ : Association Francaise pour la Cybernetique Economique et Technique என்பதன் குறும் பெயர்.


AFIPS : ஏஎஃப்ஐபீஎஸ் : American Federation of Information Process Societies என்பதன் குறும்பெயர். தரவு செயலாக்கச் சங்கங்களின் அமெரிக்கக் கட்டமைப்புகள் என்பது பொருள்.


AFK : ஏஎஃப்கே : விசைப் பலகையிலிருந்து விலகி எனப்பொருள்படும் Away From Keyboard என்ற சொல் தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். இணையத்திலும், தரவுப் பணிகளிலும் நிகழ்நேர அரட்டைகளில் இம்மரபுத் தொடர்பயன் படுத்தப்படுகிறது. ஒரு வினாவுக்கு சட்டென்று பதிலிறுக்க முடியாத நிலையைச் சுட்டுகிறது.