பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/585

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

file control 'block method

584

file fragmentation


கோப்பு இறுக்கம் : ஒரு கோப்பினை வேறிடத்துக்கு அனுப்பி வைக்க அல்லது சேமிக்க அதன் அளவைச் சுருக்கும் செயல்முறை.

file control block method : கோப்புக் கட்டுப்பாட்டுத் தொகுதி முறை : கோப்புக் கட்டுப்பாட்டுத் தொகுதிகள் மூலமாக வட்டுக்கோப்புகளை அணுகுகிற DOS செயற்பணிகளின் ஒரு தொகுதி. இது இன்று வழக்கற்றுவிட்டது.

file conversion : கோப்பு மாற்றல் : கோப்பின் ஊடகம் அல்லது அமைப்பு முறையை மாற்றும் செயலாக்கம்.

file conversion utility : கோப்பு மாற்றல் பயன்பாடு.

file control block : கோப்புக் கட்டுப்பாட்டுத் தொகுதி : ஒரு கணினியின் இயக்கமுறைமை, திறந்து வைக்கப்பட்ட ஒரு கோப்பு பற்றிய விவரங்களைப் பதிவுசெய்து வைத்துக் கொள்வதற்கு தற்காலிகமாக ஒதுக்கப்படும் நினைவகப் பகுதி.

file creation module : கோப்பு உருவாக்கத் தகவமைவு.

file deletion : கோப்பு நீக்கம்.

file descriptor : கோப்பு விவரிப்பி : BASIC போன்ற உயர்நிலை மொழிகளில், கோப்பு விவரிப்பி என்பது, கோப்பினைத் திறப்பதற்கான இடையக எண். எடுத்துக்காட்டு : as # 1 அல்லது # 3.

file, destination : சேரிடக் கோப்பு.

file directories : கோப்பு அட்டவணைத் தொகுப்பு.

file dump : கோப்புத் திணிப்பு.

file, end of : கோப்பு முடிவு.

file extent : பரவுக் கோப்பு.

file extension : கோப்பு வகைப்பெயர்.

file format : கோப்பு உருவமைவு : ஒரு கோப்பின் கட்டமைவு. தரவுத் தளம், சொல் செய்முறைப்படுத்துதல், வரைகலை, கோப்புகள் ஆகியவற்றுக்கு வணிகமுறை உருவமைவுகள் உள்ளன.

file fragmentation : கோப்புக் கூறாக்கம் : 1. ஒரு கோப்பின் விவரங்கள் வட்டில் தொடர்ச்சியாக எழுதப்படுவதில்லை. சிறுசிறு கூறுகளாக்கப்பட்டு வட்டில் ஆங்காங்கே பதியப்படுகின்றன. எங்கே பதியப்பட்டுள்ளது என்கிற விவரம் ஒர் அட்டவணையில் எழுதப்படுகிறது. இதன் காரணமாய் வட்டில் எழுதப்படாத இடங்களும் தொடர்ச்சியாக இருப்