பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/589

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

file - protect ring

588

file server


file - protect ring : கோப்புப் பாதுகாப்பு வளையம் : மின்காந்த நாடாவில் உள்ள தகவல்களைப் பாதுகாக்கப் பயன்படுத்தப்படும் சாதனம். நாடா சுருணையிலிருந்து வளையத்தை நீக்குவதன் மூலம் நாடாவின் மீது தவறுதலாக எழுதுவது தவிர்க்கப்படுகிறது. write protect-க்கு இணைச் சொல்.

file recovery : கோப்பு மீட்பு : இழந்துபோன அல்லது படிக்க முடியாத வட்டுக் கோப்புகளை மீட்டெடுக்கும் செயல்முறை. பல்வேறு காரணங்களினால் கோப்புகள் தொலைந்து போகலாம். கவனக்குறைவாக அழித்துவிடல், கோப்பு பற்றி எழுதி வைக்கப்பட்டுள்ள விவரங்களுக்கு பாதிப்பு ஏற்படல், வட்டு பழுதடைதல் போன்ற காரணங்களினால் நாம் கோப்புகளை இழக்க நேரிடுகிறது. ஒரு கோப்பினை அழிக்கும்போது அதன் விவரங்கள் அழிக்கப்படுவதில்லை. அந்த இடம் பிற கோப்புகளுக்குக் கிடைக்கும். கோப்பு விவரங்கள் எழுதப்பட்ட இருப்பிடங்களை அடையாளம் காணமுடிந்தால் ஒட்டு மொத்தக் கோப்பையும் மீட்டுவிட முடியும். பழுதான கோப்புகளைப் பொறுத்தமட்டில், வட்டில் குறிப்பிட்ட பகுதியில் இருக்கும் விவரத்தைப் படித்து வேறொரு வட்டில் அல்லது கோப்பில் ஆஸ்கி (ASCI) அல்லது இரும/பதினறும எண்ணுருவில் எழுதிக்கொள்ளும் நிரல்கள் உள்ளன. எனினும் இந்த முறையில் மூலத்தகவலை அப்படியே பெறுவது இயலாது. இழந்த கோப்புகளை மீட்பதற்குச் சிறந்த வழிமுறை அவற்றை காப்பு நகலிலிருந்து (Backup) பெற்றுக் கொள்வதேயாகும்.

file recovery programme : . கோப்பு மீட்புச் செயல்முறை : தற்செயலாக நீக்கப்பட்டு அல்லது சேதமடைந்துவிட்ட வட்டுக்கோப்புகளை மீட்பதற்கான மென்பொருள்.

file retrieval : கோப்பு கொணர்தல் : ஒரு தரவுக் கோப்பினை, சேமித்து வைக்கப்பட்ட இடத்திலிருந்து அதனைப் பயன்படுத்தவிருக்கும் கணினிக்குக் கொணரும் நடவடிக்கை.

file, sequential : தொடரியல் கோப்பு.

file server : கோப்புப் பரிமாறி; கோப்பு வழங்கி : ஒரு வளாகக் கணினிக் கட்டமைப்பிலுள்ள தலைமைக் கணினி. இது, இதனுடன் இணைக்கப்பட்டுள்ள மற்ற அனைத்துப் பொறியமைவுகளும் அணுகக் கூடிய