பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

. af. mil

58

AI



. af. mil : ஏஎஃப். மில் அமெரிக்க நாட்டு விமானப் படையின் இணைய தள முகவரி என்பதைக் குறிப்பிடும் களப் பெயர்.


AFS : ஏஎஃப்எஸ் : ஆண்ட்ரூ கோப்பு முறைமை என்று பொருள்படும் Andrew File System என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். மிகப் பெரும் பிணையங்களில் தொலைவிலுள்ள கோப்புகளை அணுகுவதற்கு வகைசெய்யும், பகிர்மானக் (distributed) கோப்பு முறைமை. கார்னெஜீ மெல்லான் (Carneie - Melion) உருவாக்கியது.


. ag : ஏஜி : இணையத்தில், ஆன்டீருவா மற்றும் பார்புடா பகுதிகளைச் சேர்ந்த இணைய தளம் என்பதைக் குறிப்பிடும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.


agent : முகவர் நிரல் : 1. ஒரு பயனாளர் இட்ட பணியைப் பின்னணியில் செய்து, அப்பணி முடிந்த பிறகோ அல்லது ஏதா\வது ஒரு நிகழ்வின்போதோ, பயனாளருக்கு அறிவிக்கும் ஒரு நிரல். 2. பயனாளர் குறிப்பிட்ட தலைப்பிலுள்ள தரவுகளை ஆவணக் காப்பகங்களில் அல்லது தரவுக் கருவூலங்களில் தேடிக் கண்டறிந்து தரும் ஒரு நிரல் பெரும்பாலும் இத்தகைய முகவர் நிரல்கள் இணையத்தில் பயன்படுத்தப்படுகின்றன. பொதுவாக இவை ஒரே வகையான தரவு சேமிப்புக் கருவூலங்களில் தேடுவதற்கென உருவாக்கப் பட்டவை. எடுத்துக்காட்டாக, யூஸ்நெட் எனப்படும் செய்திக் குழுக்களில் வெளியிடப் பட்டுள்ள தரவுகளைத் தேடுபவை. இணையத்தில் ஸ்பைடர் என்ற முகவர் நிரல் பயன் படுத்தப்படுகிறது. அறிவுக் கூருள்ள முகவர் என்றும் அழைக்கப்படும். 3. கிளையன்/ வழங்கன் பயன்பாடுகளில், வழங்கன் கணினிக்கும், கிளையன் கணினிக்கும் இடையே இடையீடாக இருந்து செயல்படுவது. 4. எளிய பிணைய மேலாண் நெறிமுறையில் (Simple Network Management Protocol - SNMP) - பிணையப் போக்குவரத்தை கண்காணிக்கும் செயல்முறை.


aggregate operator : மொத்தமாக்கு செயல்குறி.


AGP - Accelarated Graphics Port முடுக்கு வரைகலைத் துறை.


AI : ஏஐ : செயற்கை நுண் அறிவு : Artificial Intelligence என்பதின் குறும்பெயர். இது கணினி அறிவியலின் ஒரு கிளையாகும். அது மனிதர்களைப்போல கணினி களைச் சிந்திக்கவைக்கும் முயற்சியில் ஈடுபடுகிறது. இந்