பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/592

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

filling

591

FILO


பயன்படாத இடப்பரப்புகளில் எழுதப்படும் ஓர் எழுத்து.

fill colour : நிரப்பு நிறம் .

filling : நிரப்புதல் : கணினி வரைகலையில், வரையறுக்கப்பட்ட பகுதியின் உட்புறத்தில் நிறம், சாயல் அல்லது இயக்குபவர் விரும்புகின்றவற்றை இட்டு நிரப்பப் பயன்படும் ஒரு மென்பொருள் செயல்பாடு.

fill in screen : நிரப்புத் திரை : ஒரு தரவுப் பதிவுத் திரை. இதில் தரவுப் பதிவு முனைகளாகப் பல பெட்டிகள் அல்லது கம்பித் தொடர்கள் அமைந்திருக்கும். ஒவ்வொரு தரவு முனையும் ஒரு தருக்க முறைப்படி அமைந்து, எந்த தரவு இனம் எங்கே செல்லவேண்டும் என்பதைக் குறிக்கும் முகப்புச் சீட்டையும் கொண்டிருக்கும். இந்த வகை நிரப்புத்திரை பெரும்பாலும் விமான பயணச் சீட்டு முன்பதிவுகளில் பயன்படுத்தப்படுகிறது. இதனைத் "தரவு பதிவுத் திரை" (Data Entry Screen) என்றும் கூறுவர்.

fill pattern : நிரப்புத் தோரணி : ஒர் உருக்காட்சியின் பரப்புப் பகுதியை நிரப்புவதற்குப் பயன்படுத்தப்படும் வண்ணம், வண்ணச்சாயல் அல்லது தோரணி. ஒரு LAN நிலையம் தகவல்களைப் பெறாதிருக்கிறபோது அல்லது அனுப்பாதிருக்கிறபோது ஒருங்கிணைப்பைப் பேணுவதற்காக அந்த நிலையத்தினால் அனுப்பப்படும் குறியீடுகள்.

film : படச்சுருள்.

film developer : படச்சுருள் துலக்கல் : கோம் (COM) சாதனங்களுக்காக நுண் திரைப்படத்தினை மாற்றி அமைக்கும் கருவி.

film reader : படச்சுருள் படிப்பி .

film recorder படச்சுருள் பதிப்பி : ஒரு CAD, வண்ண அல்லது வணிக வரைகலைத் தொகுதி மூலம் உருவாக்கப்பட்டுள்ள ஒரு வரைகலைக் கோப்பிலிருந்து ஒரு 35மி. மீ. பட வில்லையைத் தயாரிக்கிற சாதனம். இது, 2, 000 முதல் 4, 000 வரையிலான வரிகளைக் கொண்ட உயர்செறிவுப் படங்களை உருவாக்குகிறது. படச்சுருள் பதிப்பியுடன் இணைக்கப் பட்டுள்ள ஒரு கட்டுப்பாட்டுப் பலகையில் செருகுவதன் மூலம் சொந்தக் கணினிகளுடன் படச்சுருள் பதிப்பிகளை இணைக்கலாம்.

FILO : ஃ பைலோ : First in Last out என்பதன் குறும்பெயர். ஒரு பட்டியல், மேசை அல்லது அடுக்கிலிருந்து வகையறாக்களைத் திரும்ப எடுப்பதற்கோ