பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/593

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

filter

592

financial information


அல்லது அவற்றில் சேமிப்பதற்கோ கடைப்பிடிக்கப்படும் முறை. முதலில் சேமிக்கப்படும் பொருளைக் கடைசியில்தான் வெளியில் எடுக்க முடியும்.

filter : வடிகட்டி : ஒரு தரவுவை, வாசகத்தை அல்லது வரைகலை உருவமைவை மற்றொன்றாக மாற்றுகிற செய்முறை. இதில், தேர்ந் தெடுக்கப்பட்ட தரவு மட்டுமே செல்லக்கூடிய, தோரணி அல்லது திரை பயன்படுத்தப்படுகிறது. தரவுத் தளத்திலிருந்து தரவு இனங்களை வரவழைக்கிற மென்பொருள் நிரல்.

filter by form : படிவவழி வடிகட்டல்.

filter excluding selection : தேர்ந்ததைத் தவிர்த்து வடிகட்டல்.

filtering programme : சல்லடை நிரல்;வடிகட்டி நிரல் : தகவலை வடிகட்டித் தேவையான விவரங்களை மட்டும் எடுத்துத் தரும் நிரல்.

filter by selection : தேர்வு மூலம் வடிகட்டல்.

filter keys : வடிகட்டி விசைகள் : விண்டோஸ் 95 இயக்க முறை மையில் கன்ட்ரோல் பேனலில் அணுகும் முறை (Accessibility) விருப்பத் தேர்வுகள் உள்ளன. உடல் ஊனமுள்ளவர்கள் விசைப்பலகையைப் பயன்படுத்தும் முறைகள் அதில் உள்ளன. விசைப்பலகையிலுள்ள விசைகளின்மீது விரல்களை அழுத்தும்போது மெதுவான அல்லது தவறான விரல் அசைவுகளினால் ஏற்படும் பிழைகளைப் புறக்கணிக்குமாறு கணினிக்கு அறிவுறுத்த முடியும். இதற்கென வடிகட்டி விசைகள் வசதி உள்ளது.

final form text DCA : இறுதி வடிவ உரை டிசிஏ : ஒத்திசைவில்லா இரண்டு நிரல்களுக்கிடையே தரவு பரிமாறிக் கொள்ளும் பொருட்டு, அச்சிடவதற்குத் தயாரான வடிவில் சேமித்து வைக்கப்படும் ஆவணத்தின் தரவரையறை. ஆவண உள்ளடக்கக் கட்டமைப்பு என்ற பொருள்படும் Document Content Architecture என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர் டிசிஏ என்பது.

finalize : முடிவுறுத்து.

finalizer : முடிவுறுத்தி.

finally : முடிகவாக.

final value : இறுதி மதிப்பளவை.

finally : முடிவாக.

financial information systems : நிதியியல் தரவுப் பொறியமைவு :