பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/594

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

financial planning

593

fine print


ஒரு வணிகத்திற்கு நிதியுதவி செய்வதிலும், நிதியியல் ஆதாரங்களை ஒதுக்கீடு செய்வதிலும், கட்டுப்படுத்துவதிலும் நிதியியல் மேலாளர்களுக்கு உதவுகிற தரவுப் பொறியமைவு. பண மற்றும் பிணைய ஆவண மேலாண்மை, மூலதன வரவு செலவுத் திட்டம் வரைதல், நிதியியல் முன்னறிவிப்பு, நிதியியல் திட்டமிடல் ஆகியவை இதில் அடங்கும்.

financial planning language : நிதியியல் திட்டமிடல்மொழி : தரவு உருமாதிரிகளை உருவாக்கவும், ஒரு நிதியியல் திட்டமிடல் பொறியமைவுக்கு நிரலிடவும் பயன்படுத்தப்படும் மொழி.

financial planning system : நிதியியல் திட்டமிடல் பொறி யமைவு : மாற்று முறைகளைக் கணித்தறிவதற்குப் பயனாளருக்கு உதவிபுரிகிற மென் பொருள். இது, ஒரு தரவு உருமாதிரியை உருவாக்க அனுமதிக்கிறது. இந்த உருமாதிரி, சமன் பாட்டு வடிவில் தரவுக் கூறுகளின் ஒரு தொடர் வரிசையாக அமைந்திருக்கும். எடுத்துக் காட்டு : மொத்த ஆதாயம்;மொத்த விற்பனை, விற்பனைச் சரக்குகளின் அடக்கவிலை. பல்வேறு மதிப்பளவு களைச் செலுத்தி, பல்வேறு விருப்பத் தேர்வுகளைப் பெறலாம்.

find : கண்டுபிடிப்பு : குறிப்பிட்ட கோப்புகளில் ஒரு சரத்தைத் தேடுவதற்கான ஒரு DOS ஆணை.

find all files : அனைத்துக் கோப்புகளையும் கண்டறி.

find and replace : தேடி மாற்றி வை;தேடி மாற்று;கண்டறிந்து மாற்று.

find duplicates : போலிகளைக் கண்டறி.

find entire cells : அனைத்துக் கலங்களையும் கண்டறி.

finder : தேடி : ஆப்பிள் மெக்கின்டோஷ் இயக்கச் சூழ்நிலையின் மையப்பொருள். வட்டுகளில் சேமிக்கப்பட்ட கோப்புகளை ஒழுங்கு படுத்துவதும், காட்டுவதும் உள்ளிட்ட பல பணிகளைச் செய்யும் ஒரு நிரலாக்கத்தொடர்.

find next : அடுத்தது கண்டறி.

find now : இப்போது கண்டறி.

find unmatched : பொருந்தாதன கண்டறி.

fine : தரமான.

fine print : தரமான அச்சு.