பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/595

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

finesse

594

firewall


finesse : நய நுட்பம் : 'உருவங்கள்' என்ற பட்டியல் திரையின் 'ஜெம்' சூழலைப் பயன்படுத்து கிற ஒரு DTP மென்பொருள்.

finger : ஃபிங்கர் : இது ஒர் இணையப் பயன்பாட்டு நிரல். இணையத்தில் நுழையும் ஒரு பயனாளர், இணையத்தில் நுழைந்துள்ள இன்னொரு பயனாளர் பற்றிய விவரங்களை அறிந்துகொள்ள உதவும் நிரல். இன்னொரு பயனாளரின் மின்னஞ்சல் முகவரியைக் கொடுத்தால், அவரின் முழுப்பெயர் மற்றும் பிறர் அறிந்துகொள்ள அவர் அனுமதித்துள்ள மற்ற விவரங்களையும் பெற முடியும். அல்லது ஒரு பெயரைத் தந்து அப்பெயரில் உள்ளவர்கள் இணையத்தில் அப்போது உலா வருகின்றனரா என்பதையும் அறியலாம். ஆனால், பிற வலைத்தளங்கள் இந்த நிரல் அணுகுவதற்கு அனுமதி தர வேண்டியது முக்கியமாகும். யூனிக்ஸ் பணித்தளத்தில் மட்டுமே செயல் பட்டு வந்த ஃபிங்கர் இப்போது வேறுபல பணித்தளங்களுக்கான வடிவங் களிலும் கிடைக்கிறது.

fingerprint reader : கைரேகை படிப்பி : பாதுகாப்பு நோக்கங்களுக்காக ஒருவரின் கைரேகையை அடையாளம்காணப் பயன்படுத்தப்படுகிற நுண்ணாய்வுக் கருவி. ஒரு கைரேகை முன் மாதிரி எடுக்கப் பட்டபின்பு, ஏற்கெனவே சேமித்து வைக்கப்பட்டுள்ள கைரேகைகளுடன் அது ஒத் திருக்குமானால், ஒரு கணினியை அல்லது பிற பொறியமைவை அணுகு வதற்கு அனுமதியளிக்கப்படுகிறது.

finite : முடிவான;அறுதியான;வரையறைக்குட்பட்ட : வரையறை களுக்குட்பட்டது. ஒரு முடிவு அல்லது ஒரு கடைசி எண். Infinite-க்கு எதிர்ச் சொல்.

finite element method : அறுதி பொருள் முறை : பல்வேறு பொறியியல் துறைகளில் களப்பகுதியின் சிக்கல்களைத் தீர்க்க உதவும் தொழில்நுட்பம்.

FiPS : ஃபிப்ஸ் : "கூட்டரசுத் தகவல் செய்முறைப்படுத்தும் செந்தரம்" எனப் பொருள்படும் "Federal Infor-mation Processing Standard" என்பதன் தலைப் பெழுத்துக் குறும்பெயர்.

firewall : நெருப்புச் சுவர்;தீச்சுவர் : ஒர் உள்முக இணையத்திலுள்ள கணினிகளைப் புறமுக அணுகுதல்களிலிருந்து பாதுகாப்பதற்கான ஒரு பாதுகாப்பு நடவடிக்கை. இது, இணையத்திற்கும் புற உலகிற்குமிடையில்