பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/596

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

firmware

595

first computer programmer


ஒற்றை வாயில் ஏற்படுத்துவதன் மூலம் அமைக்கப்படுகிறது. இந்த வாயில் வழியாக மட்டுமே எல்லாத் தொகுதிகளும் செல்ல முடியும். பிறகு இந்த வாயில் வழியே குறிப்பிட்ட சில அணுகுதல்கள் மட்டுமே அனுமதிக்கப்படு மாறு அமைக்கப்படுகிறது.

firmware : நிலைச்சாதனம் : வட்டு அல்லது நாடா போன்ற கணினியின் வெளிப்புறத்தில் வைக்கப்படும் வன்பொருள் மற்றும் மென்பொருள் நிர லாக்கத் தொடர் அல்லாத ரோம் எனப்படும் வன்பொருள் சிப்புவினுள் நிரந்தரமாக வைக்கப்பட்டுள்ள நிரலாக்கத் தொடர்.

firmware programmes : அசையாப் பொருள் செயல்முறைகள்;நிலைச் சாதன செயல்முறைகள் : இவை படிப்பதற்கு மட்டுமேயான நினைவுப் பதிப்பி களில் (ROM) மட்டுமே அமைக்கப்படுகின்றன. இவற்றை மிக விரைவாக அணுகலாம். எந்திரத்தை நிறுத்தும்போது இவை இழக்கப்படுவதில்லை. எனவே, இவை எந்திரத்தில் நிரந்தரமாக இருந்து வரும் என்பதால் இவற் றைக் கணினியில் மீண்டும் ஏற்றவேண்டியதில்லை.

FIR port : எஃப்ஐஆர் துறை : வேக அகச்சிவப்புத் துறை என்று பொருள் படும் Fast Infrared Port என்ற தொடரின் சுருக்கச்சொல். ஒரு கம்பி யில்லா உள்ளீட்டு/வெளியீட்டுத் துறை. பெரும்பாலும் கையிலெடுத்துச் செல்லும் கணினிகளில் இருக்கும். அகச்சிவப்பு ஒளிக்கதிர் மூலமாக புறச்சாதனங்களுடன் தரவுவைப் பரிமாறிக் கொள்ளும்.

FIRST : ஃபர்ஸ்ட் : நிகழ்வு எதிர்ச்செயல் மற்றும் பாதுகாப்பு குழுக்களின் அமைப்பு என்று பொருள்படும் Forum of Incident Response and Security Teams என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். இணையக் கழகம் (Internet Society-ISOC) அமைப்பினுள் செயல்படும் ஒரு நிறுவனம் ஆகும். கணினி அமைப்புகளின் பாதுகாப்புக்கு ஏற்படும் ஆபத்துகளுக்கு எதிரான கூட்டு முயற்சியையும், தரவு பகிர்வையும் ஊக்குவிக்கும் பொருட்டு செர்ட் (CERT) அமைப்புடன் சேர்ந்து செயல்படுகிறது.

first computer programmer : முதலாம் கணினி செயல் வரைவாளர்; நிரலர் : ஆங்கிலக் கவிஞர் பைரனின் மகளான லேடி அடா லவ்லேஸ் இந்த சிறப்புத் தகுதியைப் பெற்று உள்ளார்.