பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/597

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

first fit

596

first order predicate


first fit : முதல் பொருத்திடம் : திறம்பாடு தேவையான அளவைவிட அதிகமாகக் கொண்டுள்ள முதல் தொகுதிக்கு நுண்ணாய்வு மூலம் சேமிப்புப் பகுதியினைத் தேர்ந்தெடுக்கிற ஒரு முறை.

first generation computer languages : முதல் தலைமுறைக் கணினி மொழிகள் : ஈரிலக்கக் குறியீட்டில் பதிவு செய்யப்பட்டுள்ள அறிவுறுத் தங்களின் ஒரு தொகுதி. இது முதல் தலைமுறை மொழி எனப்படும். இதில், '0' களும், '1'களும் அடங்கியிருக்கும். இதனை'எந்திர மொழி என்றும் கூறுவர். இதனைக் கணினி புரிந்து கொள்ளும். இந்தத் தலை முறையைச் சேர்ந்த மொழியை மட்டுமே கணினி நேரடியாகப் புரிந்து கொள்கிறது. கணினியால் செய்முறைப்படுத்துதல் தொடங்கப்படுவதற்கு முன்பு, பயன்படுத்துபவரின் அறிவுறுத்தங்கள் அனைத்தும் முதலில் இந்த மொழியில் மாற்றம் செய்யப்படுகின்றன. இதனை'ஈரிலக்க மொழி (Binary Language) என்றும் கூறுவர்.

first generation computers : முதல் தலைமுறைக் கணினிகள் : 1951இல் யூனிவாக்கில் (UNIVAC) அறிமுகப்படுத்தப்பட்டு, 1959 இல், முழுவதும் மின்மப் பெருக்கிகளால் ஆன கணினிகளாக வளர்ச்சி பெற்றதில் முடிகின்ற, வணிக முறையில் கிடைத்த முதல் கணினிகள். வெற்றிடக் குழாய்களைக் கொண் டிருந்த இவை இப்போது காட்சிப் பொருள்களாக மட்டுமே உள்ளன.

first in first out : முதல் புகு முதல் விடு;முதலில் வந்தது முதலில் செல்லும் : ஒரு கியூவில் நிற்பவர்களுள் முதலில் வந்தவரே முதலில் செல்லமுடியும். கணினியிலும் இதுபோல, ஒரு பட்டியலில் முதலில் சேர்க்கப்பட்டதே முதலில் நீக்கப்படுகின்ற முறை பல்வேறு செயலாக்கங் களில் பின்பற்றப்படுகிறது. எடுத்துக்காட்டாக, அச்சுப்பொறிக்கு அனுப்பப்பட்ட ஆவணங்களின் பட்டியலில் முதலில் வந்ததே முதலில் அச்சிடப்படும்.

first-in-last-out : முதல் புகு கடை விடு : முதலில் வந்தது இறுதியில் செல்லும்.

first order predicate logic : முதல் நிலை பயனிலை தருக்க முறை : ஒரு கோட்பாட்டில் உள்ள மாறிலிகளில் செய்யப் படவேண்டிய நியமங்களை

இது அனுமதிக்கிறது. புரோ