பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/599

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

fixed length files

598

fixed size records


fixed length files : நிலை நீளக் கோப்புகள் : பயன்பாட்டுச் செயல் முறை கோப்புகளை, மற்றப் பதிவேடுகளின் துணையின்றி நேரடியாக அணுகக்கூடிய வகையில் பதிவேடுகளைச் சேமித்து வைத்துள்ள கோப்புகள்.

fixed length record : நிலையான நீளப் பதிவேடு : எப்போதும் ஒரே எண்ணிக்கையில் எழுத்துகளைக் கொண்ட பதிவேடு. Variable length record-க்கு எதிர்ச்சொல்.

fixed numeric format : மாறா எண் வகை வடிவம்.

fixed point : நிலையான புள்ளி;மாறாப்புள்ளி : ஒரு வகையான எண்முறை. ஒவ்வொரு எண்னின் மதிப்பும் பல இலக்கங்களின் தொகுதியால் குறிப்பிடப்படுகிறது. இதில் பின்னணிப் புள்ளிகன் (radix point) இடம் எது என்பது எண்களைப் பயன்படுத்தும் முறையைக் கொண்டு முடிவு செய்யப்படுகிறது. Floating Point-க்கு எதிச்சொல்.

fixed-point arithmatic : நிலைப் புள்ளிக் கணக்கீடு : ஒவ்வொரு எண்ணின் பதின்மப் புள்ளியினையும் சரியான இடத்தில் கொண்டிருக்கிற அமைப்பு முறை. எனினும், இதில் இட நிலையினைக் கணிப்புக்க முன்பே குறித்து விடலாம். இது கணினி விரைவாகக் கணிப்பதற்கு அனுமதிக்கிறது; எனினும் எண்களின் வடிவளவைக் கட்டுப்படுத்துகிறது.

fixed point notation : நிலைப் புள்ளிக் குறிமானம் : பதின்மப் புள்ளி ஒரு குறிப்பிட்ட இடத்தில் நிலைத்து இடம்பெறும் எண் வடிவாக்கம். இத்தகைய எண்வடிவம் கச்சிதமான திறன்மிக்க முழுஎண் வடிவத்துக்கும், பரந்த மதிப்பு களைச் சுட்டவல்ல சிக்கலான மிதவைப் புள்ளி வடிவத்துக்கும் இடைப் பட்டதாகும். மிதவைப் புள்ளி எண்களைப் போலவே, நிலைப் புள்ளி எண் களிலும் பின்னப்பகுதி உண்டு. ஆனாலும், மிதவைப் புள்ளியெண் கணக் கீடுகளைவிட நிலைப்புள்ளியெண் கணக்கீடுகளுக்கு குறைந்த நேரமே ஆகும்.

fixed point representation : நிலைப் புள்ளி உருவகிப்பு.

fixed-programme computer : நிலை நிரல் கணினி.

fixed scale : நிலையான அளவு கோல்;நிலை அளவு கோல்.

fixed size records : நிலையான அளவுப் பதிவேடுகள் : ஒரே அளவிலான சொற்கள், எழுத்துகள், எட்டியல்கள், துண்மிகள்,