பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

AIFF

59

AIX




நோக்கங்களுக்காக மனிதப் பகுப்பாய்வு குறித்து பெருக ஆய்வுகள் நடந்துள்ளன.


ΑΙFF : ஏஐஎஃப்எஃப் : ஆப்பிள் மற்றும் சிலிக்கான் கிராஃபிக்ஸ் கணினிகளில் தொடக்க காலத்தில் பயன்படுத்தப்பட்ட ஒலித் தரவுச் சேமிக்கும் கோப்பு வடிவம். ஒலியலை வடிவக் கோப்புகள் 8 துண்மி (8-பிட்) வடிவில் சேமிக்கப்படுகின்றன.


Aiken, Howard Hathaway : (1900-1973) அய்க்கன் ஹோவர்ட் ஹாத்வாய் : (1900-1973) 1937-க் கும் 1944-க்கும் இடைப்பட்ட காலத்தில் ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் தானியங்கு தொடர் முறைக் கட்டுப்பாட்டு கணிப்பி எனும் முதல் மின் இயந்திரக் கணினியை உருவாக்கி வடி வமைத்த வல்லுநர்கள் குழுவின் தலைவர்.


aircraft simulator : வானுர்தி போன்மி : வானூர்தி பாவிப்பு : வானூர்தி விமானிகளுக்குப் பயிற்சியளிக்கும் கணினி கட்டுப்பாட்டுச் சாதனம். நவீன ஜெட் வானூர்தி விமானி அறையில் உள்ள கருவிகள் அனைத்தும் இதில் இருக்கும். உண்மையான விமானத்தில் இருப்பது போன்ற சூழ்நிலையை உருவாக்கி மனம் வியக்கும் வரை கலைகள் உருவாக்கப்படும். உண்மையான விமானத்தில் போன்றே இதிலும் பயிலலாம்.


airline reservation system : வானூர்தி முன்பதிவு முறைமை : நேரடிப் பயன்பாட்டு அணுகல் கணினித் தொடர்பு முறை. இம் முறையில், வானூர்திகளின் இருக்கைகள் நிலை, வானுர்தி பறக்கும் நேர வரிசைகள், மற்றும் வானுர்திப் பணிகளை நடத்த தேவையான தரவுகள், அந்நேரம் வரையிலான தரவுக் கோப்புகளைப் பராமரித்தல், கோரல்களுக்கு விநாடிகளுக்கு குறைவான நேரத்தில் பதிலளித்தல், முதன்மைக் கணினியிலிருந்து தொலைதூரத்தில் உள்ள பயணச் சீட்டு முகவர்களின் கேள்விகளுக்கு உடனடியாகப் பதிலளித்தல் ஆகியவற்றுக்கு கணினி பயன்படுத்தப்படுகிறது.


AISP : ஏஐஎஸ்பீ : தகவல் முறைமைத் தொழில் துட்பவியலாளர் சங்கம் எனப் பொருள்படும் Association of Information Systems Professionals என்பதன் குறும் பெயர். தரவு முறைமைகளின் எல்லா அம்சங்களுடன் தொடர் புடைய தொழில் நுட்பவியலாளர் சங்கம். 1972இல் உரு வாக்கப்பட்டது. இதன் கிளைகள் உலகெங்கும் உள்ளன.


AIX : ஏஐஎக்ஸ் : உயர்நிலை ஊடாடும் இயக்கநிலை என்று