பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/602

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

flash memory

601

flat file


படும் ஒன்றின் மீது கவனத்தை ஈர்ப்பதற்கு இது பயன்படுகிறது.

flash memory:மின்வெட்டு நினைவகம்:விசையின்றித் தனது உள்ளடக்கத்தை இருத்தி வைத்துக் கொள்கிற நினைவகச் சிப்பு. ஆனால், இது மொத்தமாக அழித்துவிடப்படுதல் வேண்டும். மின்வெட்டு நேரத்தில் அழித்துவிடக்கூடிய இதன் தன்மையிலிருந்து இதற்கு இந்தப் பெயர் வந்தது. இந்தச் சிப்புகளின் விலை குறைவு. அதே சமயம் இவை அதிகத் துணுக்குச் செறிவுகள் உடையவை. இது இன்றைய,படிப்பதற்கு மட்டுமேயான நினைவகத்திற்கு மாற்றாக அமையக் கூடும்.

flat:தட்டை.

flat address space:தட்டை முகவரியெண் இடப்பரப்பு:இது ஒருவகை நினைவக முகவரி யிடும் முறை. இதில் ஒவ்வொரு எண்மி,'0'-லிருந்து தொடங்கும் வெவ்வேறு வரிசை எண் மூலம் குறிக்கப்படுகிறது. இது, 'கூறுபடுத்திய முகவரி யெண் இடப்பரப்புSegmented address space) என்பதிலிருந்து வேறுபட்டது.

flatbed plotter:கிடைத் தட்டை வருடு பொறி;கிடைத்தட்டை வரைவி; கிடைமட்ட படுகை வரைவி;சமதளப்படுகை வரைவி:தட்டையான மேற் பரப்பில் செங்குத்து மற்றும் குறுக்குவாட்ட திசைகளில் நகரும் முனை களைப் பயன்படுத்தும் இலக்கமுறை வரைவி. Drum Plotter-க்கு எதிர்ச்சொல்.

flatbed scanner:கிடைத்தட்டை வருடு பொறி;கிடைத்தட்டை வருடி: இத்தகைய வருடு பொறியில் கிடைமட்டமாக தட்டையான கண்ணாடிப் பரப்பு இருக்கும். இதன்மீது தான் புத்தகம் அல்லது தாள் ஆவணத்தைக் கிடத்த வேண்டும். அப்பரப்பின்கீழ் ஒரு வருடுமுனை அச்சுநகலின் உருப்படத்தை வருடிச் செல்லும். சில கிடைத்தட்டை வருடுபொறிகள் ஊடுகாண்(transparent) நகல்களை,காட்டாக சிலைடுகளை உருவாக்கும் திறனுள்ளவை.

flatbed type:தட்டைப் படுகை வகை.

flat file:தட்டைக் கோப்பு:மற்ற கோப்புகளுடன் தொடர்பு கொண்டிராத தரவுக் கோப்பு. இரு தட்டைக் கோப்புகளுக்கிடையிலான தொடர்பு எதுவும் தருக்க முறையிலானதாகும்.