பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/605

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

flight simulator

604

floating-point BASIC


flight simulator : பறத்தல் போன்ற நிகழ்வு : புதிய விமானத்தில் விமான ஒட்டிகளுக்குப் பயிற்சி அளிக்க விமான நிறுவனங்கள் பயன் படுத்தும் கணினி கட்டுப்பாட்டு போலி நிகழ்வு. விமானி உரிமம் புதுப்பித்தலின்போது பயிற்சி பெறவேண்டிய போலி விமானப் பயண நிகழ்வு. அதை இயக்கும் போது உண்மையில் வானத்தில் பறப்பது போலவே இருக்கும்.

flip-flop : ஏற்ற இறக்கம் : குறிப்பிட்ட நேரத்தில் நிலையான இரண்டு நிலைகளில் ஒன்றை ஏற்றுக்கொள்ளக்கூடிய இயங்கும் பொருள் கொண்ட சாதனம் அல்லது மின்சுற்று. Toggle-க்கு உடன்பாட்டுச் சொல்.

flippy : ஃபிளிப்பி ஃபிளாப்பி வட்டுக்குச் சமமான சொல். நெகிழ் வட்டுக்கு இன்னொரு பெயர்.

flippy board : இருபக்கப் பலகை : AT மற்றும் நுண் வழித்தடங்கள் இரண்டையும் இணைக்கிற சொந்தக் கணினி (PC) பலகை. இந்தப் பலகையின் ஒரு பக்கத்தில் AT இணைப்பிகளும், மற்றொரு பக்கத்தில் MCA இணைப்பிகளும் இருக்கும்.

flippy-floppy : இருபக்க நெகிழ் வட்டுஇருபக்கப் பயன்பாட்டுக்காக மாற்றப்பட்டுள்ள ஒற்றைப் பக்க 13. 33 செ. மீ. (5. 25 அங்) நெகிழ்வட்டு. இந்த வட்டின்மீது இரண்டாவது தடம் ஒன்றை வெட்டுவதன் மூலம் இந்த மாற்றம் செய்யப்படுகிறது. இதில் வட்டின் சுழற்சி மாறிமாறி வருவதால், இது பரிந்துரைக்கப்படுவதில்லை.

float : மிதவைஒரு பணி அல்லது செயல்முடிந்த பிறகு அடுத்த பணி தொடங்குவதற்கு இடையில் இருக்கக்கூடிய காலம் Slack Time என்றும் அழைக்கப்படுகிறது.

floating decimal arithmetic : மிதவைப் பதின்மக் கணக்கீடு.

floating point : மிதக்கும் புள்ளி;மிதவைப் புள்ளி : ஆதார எண்னின் மடங்கினால் பெருக்கப்படும் மான்டிசா என்ற எண்ணைப் பிரதிபலிக்கும் அளவுகளுள்ள எண் வடிவம். Fixed Point-க்கு எதிர்சொல்.

floating point arithmatic : மிதவைப் புள்ளிக் கணக்கீடு : அடிப்படை எண்ணாகிய (Radix Point) ரேடிக்ஸ் பின்னப் புள்ளியின் இருப்பிடத்தினை தானாகவே கணக்கிடும் கணக்கு முறை Fixed Point Arithmatic என்பதற்கு எதிர்ச்சொல்.

floating-point BASIC : மிதக்கும் புள்ளி பேசிக் : பதின்ம