பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/609

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

flow analysis

608

flow control


flow analysis : ஒழுக்குப் பகுப்பாய்வு;பாய்வுப் பகுப்பாய்வு : கணினி அமைப்பில் பல்வேறு வகையான தரவுகளின் போக்குவரத்தை ஆய்வு செய்யும் ஒரு வழிமுறை. குறிப்பாக, தரவுவின் பாதுகாப்பு மற்றும் அதன் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த மேற்கொள்ளப்படும் கட்டுப்பாடுகள் தொடர்பான ஆய்வாக இருக்கும்.

flow chart : தொடர் வரைபடம் : குறியீடுகள் மற்றும் ஒன்றோடொன்று இணைக்கும் வரிகளைக் கொண்டு வரையப் படும் வரைபடம். இப்படத்தில் பின்வருவன இடம் பெறலாம். 1. குறிப்பிட்ட நிரலாக்கத் தொடர் இயக்கத்தின் தருக்க முறை மற்றும் தொடர்ச்சியைக் குறிப்பிடலாம். (நிரலாக்கத் தொடர் ஒடுபடம்) அல்லது 2. நோக்க அமைப்பு. ஒரு படத்தினை உருவாக்கும் செயலாக்க அமைப்பையும் குறிப்பிடலாம். கட்ட வரைபடம் (block diagram) என்றும் சிலசமயம் கூறப்படும். ஒப்பிடுக. Structured flow chart.

flow chart, detail : விவரப் பாய்வு நிரல்படம்.

flow charter : ஓடுபட உருவாக்கி;தொடர் வரைபடம் வரைவி : புலன் காட்சித்திரை இலக்க முறை வரைவி அல்லது அச்சுப் பொறியைக் கொண்டு தானாகவே ஒடுபடங்களை உருவாக்கும் கணினி நிரலாக்கத் தொடர்.

flow charting symbol : ஓடுபட அமைப்புக் குறியீடு;தொடர் வரைபடக் குழூஉக்குறி : ஒடு படத்தில் கருவிகள், தரவு ஒட்டம் மற்றும் இயக்கங் களைக் குறிப்பிடும் குறியீடு.

flow chart, system : முறைமைப் பாய்வு நிரல்படம்.

flow chart template : ஓடுபட அட்டை : ஓட்டப்பட படிம அச்சு : ஒடுபடக் குறியீடுகளைக் கொண்டு வெளிப்புற வடிவங்களைக் கொண்ட பிளாஸ்டிக் வழிகாட்டி. ஒடுபடம் தயாரிப்பதில் பயன்படுவது.

flow chart text : ஓடுபடச் சொற்கள்;ஒட்டப்படக் குறிப்பு : ஒடுபடக் குறியீடுகளுடன் தொடர்புள்ள வர்ணனைத் தரவு.

flow control : தொடர்வரிசைக் கட்டுப்பாடு : செய்தித் தொடர்புகளில் தரவு அனுப்பீட்டினைக் கட்டுப்படுத்துதல். இது, அடுத்த தொகுதி அனுப்பப்படு வதற்கு முன்பு, தரவுகளை ஏற்பு நிலையம் செய்முறைப் படுத்தும்படி செய்கிறது. செயல்