பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/610

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

flowline

609

flush right


முறைப்படுத்தும் நிரலாக்கத் தொடர்களில் தருக்க முறையாக அமையும் "என்றால்" (lf) "பிறகு" (Then), வளையம் போன்ற கட்டளை அமைப்புகளைக் குறிக்கிறது.

flowline : ஒடு வரி;பாய்வுக் கோடு : ஒடுபடத்தில் ஒடுபடக் குறியீடுகளை இணைக்கும் பாதையைக் குறிப்பிடும் வரி. சாதாரணமாக அதன் ஒடும் போக்கு கீழ்நோக்கியும் பக்கவாட்டிலும் இருக்கும். ஓடு கோடுகள் மேல் நோக்கியோ அல்லது இடதுபக்கமாகவோ இருக்கும்போது அம்புத் தலை முறையில் அவற்றின் திசைகள் குறிப்பிடப்படும்.

flush1 : ஒழுங்கு சீர் : கணினித் திரையில் அல்லது தாளில் விவரங்கள் ஒரு குறிப்பிட்ட சீரமைவுடன் அமைந்திருப்பது. ஒழுங்கு-வலம் எனில் வலப்புறத்தில் எழுத்துகள் ஒரச்சீர்மையுடன் அமைந்திருத்தலைக் குறிக்கும். ஒழுங்கு இடம் எனில் இடப்புற ஒரச் சீர்மையைக் குறிக்கும்.

flush2 : வெளியெடு;வழித் தெடு;துடைத்தெடு;அகற்று : நினைவகத்தில் ஒரு பகுதியிலுள்ள விவரங்களைத் துடைத்தெடுத்தல். எடுத்துக்காட்டாக, வட்டுக் கோப்பு இடைநிலை (Buffer) நினைவகத்திலுள்ள விவரங்களை அகழ்ந்தெடுத்து வட்டில் எழுதிக்கொள்ள வேண்டும். அதன்பின் இடைநிலை நினைவகத்தை துடைத்தெடுக்க வேண்டும் மீண்டும் நிரப்புவதற்காக. இது போலவே விசைப்பலகையில் உள்ளீடு பெறும் விவரங்களை நுண்செயலி அல்லது வேறு உறுப்புகள் படிக்குமுன் அவை இடைநிலை நினைவகத்தில் தங்கியிருப்பதுண்டு. அவற்றையும் துடைத்தெடுத்துப் படிக்கப் படவேண்டும்.

flush center : வெளியேற்று மையம் : அச்சுக்கலையில், வாசகத்தை இடது, வலது ஒரங்களிடையே ஒரே சீராக மையப் படுத்துவதைக் குறிக்கிறது.

flush left : வெளியேற்று இடச்சீர்மை : அச்சுக்கலையில், வாசகங்கள் அனைத்தையும் ஒரே சீராக இடப்புற ஒரத்தில் வரிசைப்படுத்துதல். இடது ஒரத்தில் செங்குத்துக் கோட்டினை உருவாக்கும் வகையில் வாசகத்தை வரிசைப்படுத்தும் முறை. இது ஒரு பொதுவான அச்சிடும் உத்தியாகும்.

flush right : வலச்சீர்மை : அச்சுக்கலையில், வாசகங்கள்