பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/611

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

flux

610

folio VIEWS


அனைத்தையும் வலது ஒரத்தில் வரிசைப்படுத்தும் முறை. இதில் இடப்புற ஒரம் ஒரே சீராக இராது.

flux : காந்தப்புலம் : ஒரு காந்தத்தினால் உருவாக்கப்பட்ட ஆற்றல் புலம்.

flux reversal : காந்த்ப்புல திசை மாற்றம் : காந்தவட்டில் அல்லது காந்த நாடாவின் மேற்பரப்பில் உள்ள மிக நுணுக்கமான காந்தத் துகள்களின் திசையமைப்பில் ஏற்படும் மாற்றம். இரும இலக்கங்கள் 0, 1 ஆகியவை இருவேறு காந்தப்புல திசையினால் குறிப்பிடப்படுகின்றன. காந்தப்புல திசைமாற்றம் இரும 1-என்ற இலக்கத்தைக் குறிக்கின்றது. இரும 0-வைத் குறிக்க திசைமாற்றக் குறியீடு எதுவும் இல்லை.

FM : எஃப்எம் : Frequency Modulation என்பதன் குறும்பெயர். சமிக்கை களால் குறிப்பிடப்படும் மதிப்புகளை சமிக்கைகளின் நெருக்கத்தை ஒட்டி மாற்றுதல்.

focus : முன்னிறுத்தி.

focusing : துல்லியப்படுத்தல்;குவித்தல் : காட்சித்திரையில் தெளிவற்ற உருவத்தைத் தெளிவாக்குதல்.

folder : மடிப்புச் சுவடி;கோப்புத் தொகுப்பு : ஒருவிவரக் குறிப்பேட்டின் மாற்றுப்பெயர். 'Apple' கணினிகள், Windows NT கணினிகள் போன்றவற்றில் இச்சொல் பயன்படுத்தப்படுகிறது. மெக்கின்டோஷ் கணினியில், ஆவணங் களையும் (கோப்பு கள்), பயன்பாடுகளையும் மற்ற மடிப்புச் சுவடிகளையும் இருத்தி வைத்துக் கொள்ளும் ஒரு மாற்றுக் கோப்புத் தொகுப்பு.

folder options : கோப்புறை விருப்பத் தேர்வுகள்.

folders : கோப்புறைகள்

folio : புத்தகத்தாள் எண் : அச்சுக் கலையில் அச்சிட்ட பக்க எண். எடுத்துக்காட்டு : புத்தகத் தாள் எண் 3 என்பது, ஒரு நூலில் 27ஆம் பக்கத்தைக் குறிக்கும்.

folio VIEWS : ஃபோலியோ வியூஸ்;வாசக நோக்கி : 'ஃபோலியோகார்ப்' என்ற அமைவனம் தயாரித்துள்ள சொந்தக் கணினிகளுக்கான வாசக மேலாண்மை மென்பொருள், இது வாசகத் தரவு தளங்களுக்கான சேமிப்பு, மீட்புத் திறம்பாடுகளை அளிக்கிறது. இது 40-க்கும் அதிகமான வாசக உருவமைவுகளிலிருந்து வாசகங்களை வரவழைக்கவல்லது.