பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/612

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

follow up

611

font generator


follow up : மறுமொழி;பதிலுரை;தொடர் நடவடிக்கை : செய்திக் குழு வில் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரைக்குப் பதிலுரை. மூலக்கட்டுரையில் இருக்கும் பொருளடக்க (Subject) வரியே பதிலுரையிலும் இருக்கும். 'Re' என்பது முன்னொட்டாக இருக்கும். ஒரு கட்டுரையும் அதற்கான பதிலுரை களும் கால வரிசைப்படி தொகுக்கப்பட்டிருக்கும். பயனாளர் செய்தி படிக்கும் நிரல்மூலம் அனைத்தையும் வரிசையாகப் படிக்க முடியும்.

font : எழுத்து அச்சு;எழுத்துரு;எழுத்து வடிவு;எழுத்து வடிவிலான : ஒரு தொடர்ச்சியான தனித்த அச்சு வடிவில் எழுத்துகளின் முழுத் தொகுதி.

font cartridge : எழுத்து உருவளவுப் பொதியுறை : ஒர் அச்சடிப்பி வரிப் பள்ளத்தினுள் செருகக்கூடிய ஒரு தகவமைவில் அடங்கியுள்ள ஒன்று, அதற்கு மேற்பட்ட அச்செழுத்து முகப்புகளுக்கான உருவளவுத் தொகுதி. இந்த உருவளவுகள் பொதியுறைக்குள் ஒரு'ROM'சிப்புடன் சேமித்து வைக்கப் பட்டிருக்கும்.

font class : எழுத்துரு வகை;எழுத்துரு இனக்குழு.

Font/DA Mover : ஃபான்ட்/டி. ஏ மூவர் : பழைய ஆப்பிள் மெக்கின்டோஷ் கணினிகளில் பயனாளர் விரும்பும் எழுத்துருக்களையும், திரைப் பயன் பாடுகளையும் நிறுவிக்கொள்ள உதவும் ஒரு பயன்பாட்டு நிரல்.

font editor : எழுத்து உருப்பதிப்பி : எழுத்து உருவளவுகளை வடிவ மைத்து, மாற்றமைவு செய்வதற்கு அனுமதிக்கிற மென்பொருள்.

font family : எழுத்து உருக்குடும்பம் : ஒரே எழுத்து முகப்பிலுள்ள பல்வேறு வடிவளவு எழுத்துருக்களின் தொகுதி. இதில், சாய்வெழுத்துகள், தடித்த எழுத்துகள் போன்ற மாறுபட்ட எழுத்துருக்கள் அடங்கும்.

font family property : எழுத்துரு குடும்பப் பண்பு.

font generator : எழுத்துரு முகப்பு உருவாக்கி : எழுத்துரு முகப்பு வரைவினை ஒரு குறிப்பிட்ட எழுத்துரு முகப்புக்குத் தேவையான புள்ளிக் குறித் தோரணியாக மாற்றக் கூடிய மென்பொருள். எழுத்துரு முகப்பு உருவாக்கம் நீள வாக்கில் இருப்பதில்லை. மாறாக, எழுத்து எந்த வடிவளவுக்கும் விரிவாக்கம் செய்யப்படுகிறது.