பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/613

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

font group

612

font style


எழுத்துரு முகப்பளவு பெரிதாக பெரிதாக அதனை கவர்ச்சி கரமாக்கும் வகையில் அதன் பண்பியல்புகளும் மாறுதல் அடைகின்றன.

font group : எழுத்துருத் தொகுதி.

font metric : எழுத்துரு முகப்பு அளவீடு : ஒர் எழுத்துரு முகப்பின் ஒவ்வொரு பண்பியல்புக்கு உரிய அச்சுக்கலைத் தரவுகள் (அகலம், உயரம், உருவாக்க மையம்).

font number : எழுத்துரு எண் : ஒரு பயன்பாட்டுத் தொகுப்பு அல்லது இயக்க முறைமை, ஒர் எழுத்துருவை அடையாளம் கண்டுகொள்ள உதவும் எண். ஆப்பிள் மெக்கின்டோஷ் கணினியில் எழுத்துருக்கள் அவற்றின் பெயர்களைக்கொண்டும் மற்றும் அவற்றின் எண்களைக் கொண்டும் அடை யாளம் காணப்படுகின்றன. ஒர் எழுத்துரு கணினியில் நிறுவப் படும்போது அதே எண்ணில் ஏற்கெனவே ஒர் எழுத்துரு நிறுவப்பட்டிருக்கிறது எனில், புதிய எழுத்துருவின் எண்ணை மாற்றிக் கொள்ள முடியும்.

font page : எழுத்துருப் பக்கம் : ஐபிஎம்-பல்வண்ண வரைகலைக் கோவை ஒளிக்காட்சி (Graphics Array Video) அமைப்புகளில் கணினித் திரையில் எழுத்துகளைக் காண்பிக்க, அடிப்படையாக இருக்கும் ஒளிக்காட்சி நினைவகத்தின் (Video Memory) ஒரு பகுதி. நிரலர் தன் விருப்பப்படி வடிவமைத்த எழுத்துருவின் வரையறுப்பு அட்டவணையை (எழுத்து வடிவங்களின் தொகுப்பு), இந்த நினைவகப் பகுதியில்தான் இருத்தி வைக்கவேண்டும்.

font scaler : எழுத்துரு முகப்பு மறு உருவாக்கம் : எழுத்துரு முகப்பு வரைவினை புள்ளிக் குறிகளாக மாற்றுகிற மென்பொருள். எழுத்துரு முகப்பு உருவாக்கி என்பதும் இதுவும் ஒன்றே. ஆயினும் இது, பெரும்பாலும் எழுத்துரு முகப்புகளை மறு உருவாக்கம் செய்வதைக் குறிக்கிறது.

font size : எழுத்துரு அளவு : ஒர் எழுத்துருவின் உருவளவு. பெரும் பாலும் புள்ளிக் (point) கணக்கில் குறிக்கப்படுகிறது. ஒர் அங்குலம் 72 புள்ளிகளாகும்.

font size property : எழுந்துரு அளவுப் பண்பு.

font style : எழுத்துரு முகப்புப் பணி : இது எழுத்துரு முகப்பினையே (Type face) குறிக்கிறது. பெரும்பாலும் செங்குத்