பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/617

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

fork

616

formal logic


(data fork), வளக் கிளை (resource fork) இரண்டையும் கொண்டிருக்கும். பயனாளர் உருவாக்கும் பெரும்பாலான அல்லது அனைத்துக் கோப்புகளும் தரவு கிளையில் இருக்கும். வளக்கிளை பெரும்பாலும் பயன்பாட்டு நோக் கிலான தரவுகளை அதாவது எழுத்துருக்கள், உரையாடல் பெட்டிகள் மற்றும் பட்டி களைக் கொண்டிருக்கும். 

fork : கிளை பல்பணி இயக்க முறைமையில் ஒரு தாய் செயலாக்கம் தொடங்கிய பிறகு ஒரு சேய் செயலாக்கத்தைத் தொடங்கி வைக்கும் கட்டளை.

FOR loop ஃபார் மடக்கி : ஒரு கணினி நிரலில் ஒரு குறிப்பிட்ட கட்டளைப் பகுதியை குறிப்பிட்ட தடவைகள் திரும்பத் திரும்பச் செய்ய வைக்கும் கட்டுப்பாட்டுக் கட்டளை. இக்கட்டளையின் தொடர் அமைப்பு மொழிக்கு மொழி வேறுபடுகிறது. பெரும் பாலான மொழிகளில் ஒரு சுட்டுமாறிலியின் மதிப்பு குறிப் பிட்ட எல்லைக்குள் தொடர் மதிப்பாக மாறிக் கொண்டே இருக்கும். (எ-டு) பேசிக் மொழி :

FΟR Ι = 1 ΤΟ 10

PRINT |

NEXT |

பாஸ்கல் மொழி :

FOR | : = 1 TO 10 DO

         WRITELN (|) ;

சி-மொழி :

for (i=0;i<10;i++)

    printf ("%d", i) ;

சி. மொழியில் ஃபார் மடக் கியை இந்த வரையறைக்கு அப்பாலும் பல்வேறுபட்ட வடிவங்களில் பயன்படுத்த முடியும்.

form ; படிவம் : 1. ஏற்கனவே அச்சிடப்பட்ட ஆவணம் கூடுதல் தரவுவைச் சேர்த்து பொருள் உள்ளதாக ஆக்கப் படுகிறது. 2. நிரலாக்கத்தொடர் வெளியீட்டுப் படிவம்.

formal language : முறையான மொழி : முறைசார் மொழி : புரியாத கணிதப் பொருள்கள். கோபால் அல்லது பேசிக் போன்ற நிரலாக்கத்தொடர் மொழிகள். ஆங்கிலம் அல்லது ஃபிரெஞ்சு போன்ற இயற்கை மொழிகளின் இலக்கணத்தைப் பின்பற்றிப் பயன்படுத்தப்படும்.

formal logic : முறையான தருக்க அளவை : ஒரு வாக்குவாதத்தின் போது பயன்படுத்தப்படும் சொற்களின் பொருளைவிட செல்லத்தக்க வாக்குவாதத்தின் அமைப்பு மற்றும் வடிவம் என்ன என்பதை ஆராய்தல்.