பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

algorithmic language

61

allocation



முறை அல்லது முழுமையாக வரையறுக்கப்பட்ட குழப்பமற்ற விதிகள்.


algorithmic language : தருக்கப் படிமுறை மொழி; கணிமுறை மொழி : தருக்கப்படிமுறைகளை வெளியிட வடிவமைக்கப்பட்ட மொழி.


alias : மாற்றுப் பெயர்; மறு பெயர்; புனைபெயர் : ஒரு கோப்புக்கு அல்லது அட்டவணைக்கு பயனாளர் வழங்கும் மாற்றுப் பெயர்.


aliasing : ஏற்பற்ற தோற்ற மாறுபாடு : கணினி உருவாக்கிய படிமங்களில் ஏற்படக்கூடிய

ஏற்பற்ற தோற்ற மாறுபாடு (Aliasing)

விரும்பத்தகாத தோற்ற மாறுபாடுகள். இத்தோற்ற மாறுபாடு களில் பொதுவான விளைவு படிமத்தின் எல்லைகளில் தோன்றும் ஒழுங்கற்ற கோடுகளாகும்.


align bottam : அடிவரி நேர்ப்படுத்தல்.


aligning : ஒரஞ் சீரமைத்தல்.


aligning disk : இசைவு வட்டு; சீரமை வட்டு.


aligning edge : ஒழுங்கமை விளிம்பு : வடிவத்தின் முன் விளிம்புடன் இணைந்து ஒர் ஆவணத்தை நிலைப்படுத்தி கருவி மூலம் நுண்ணாய்வு செய்ய உதவும் ஒப்பு விளிம்பு.


alignment : இயைவு நிலை; சீர்மை நிலை : கருவியின் எந்திர அமைவிற்கு எந்திரம் முறையாக இயங்கப் பிழை பொறுத்தல் நிலைகளைச் சரி செய்தல்.


alignment / justify : ஓரச் சீர்மை.


align property : சீரமைப் பண்பு.


align top : விளிம்புவரி நேர்ப்படுத்தல்


all , அனைத்தும்.


allocate : ஒதுக்கு; ஒதுக்கிடு; ஒதுக்கிவை : போதுமான நினைவகப் பகுதி அல்லது அது போன்ற, எந்தவொரு வளத்தையும் நிரலின் பிந்தைய பயன் பாட்டுக்காக ஒதுக்கி வைத்தல்.


allocation : ஒதுக்கிடு : இயக்க முறைமைகளில், ஒரு நிரல் பயன்படுத்திக் கொள்வதற்காக நினைவகத்தில் ஒதுக்கீடு செய்யும்முறை.