பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/621

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

FORTRAN

620

forward chaining


முறை நிரலாக்கத் தொடர் அமைப்பதில் பயன்படுத்தப் படும் நிரலாக்கத் தொடர் மொழி. உற்பத்தித்திறன், நம்பகத்தன்மை மற்றும் செயல் திறன் களில் பயன்படுத்த குறிப்பாக ஏற்றது. வடிவமைப்பு நிரலாக்கத் தொடர மைத்தல், மேலிருந்து கீழ் வளர்ச்சி, மாய நினைவகம் ஆகியவற்றில் பயன் படுத்த ஏற்றது. மாய அடுக்கு நினைவகத்திற்கு ஏற்றதொரு பெருமொழியாக கூறப்படுவது.

FORTRAN : ஃபோர்ட்ரான் (நிரலாக்கத் தொடர் மொழி) : Formula Translator என்பதன் குரும்பெயர். பரவலாகப் பயன்படுத் தப்படும் உயர்நிலை நிர லாக்கத் தொடர் மொழி. கணித, அறிவியல் மற்றும் பொறியியல் கணிப்புகளுக்குப் பயன் படுத்தப்படுவது. அமெரிக்கத் தரநிர்ணய நிரலாக்கத் தொடர் மொழியாக இரண்டு பதிப்புகளில் ஃபோர்ட்ரான், பேசிக் ஃபோர்ட்ரான் ஏற்கப்பட்டது.

FORTRAN 77 : ஃபோர்ட்ரான் 77 : ஃபோர்ட்ரானின் ஒரு வடிவம். அன்சி 3. 9. 1978 தர நிர்ணயத் திற்கு ஏற்றது. நுண்கணினி சூழ்நிலைகளில் பயன் படுத்தும் கூடுதல் வசதி பெற்றது.

FORTRAN translation process : ஃபோர்ட்ரான் மொழிபெயர்ப்பு செயல் முறை : ஃபோர்ட்ரான் மொழியில் எழுதப்பட்ட நிரலாக்கத் தொடரில் கணிப்பு முடிவுகளை உருவாக்கப் பயன்படும் செயல்முறை. கணினிகள் நிரலாக்கத் தொடர்களைத் தொகுக்கவும் செயல்படுத்தவும் உதவுவது.

forum : மன்றம் : ஒரு குறிப்பிட்ட தலைப்பில் பயனாளர்கள் தத்தம் கருத்துகளை எழுத்து வடிவில் தெரிவித்துக் கலந்துரையாட ஒர் ஊடகத்தைப் பல்வேறு நிகழ்நிலை (online) சேவைகள் வழங்கி வருகின்றன. இணையத்தில் பெருமளவு காணப்படும் மன்றங்கள் யூஸ்நெட்டில் செயல்படும் செய்திக் குழுக்களாகும்.

fortune cookie : செல்வவளக் குக்கி;அதிர்ஷ்டக் குக்கி : பொன்மொழிகள், வருவது உரைத்தல், நகைச்சுவை-இவற்றின் தொகுப்பிலிருந்து ஏதேனும் ஒன்றைத் தேர்வு செய்து கணினித் திரையில் காண்பிக்கும் ஒருநிரல். யூனிக்ஸ் இயக்க முறைமையில் பல நேரங்களில், உள்துழையும் போதும் வெளியேறும்போதும் இது போன்ற குக்கிகள் செயல்படும்.

forward : முன்னோக்கு.

forward chaining : முன் நோக்குப் பிணைப்பு : முன்