பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/622

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

forward compatible

621

fourier transform


நோக்கு சங்கிலித் தொடர் : மேதமைக் கணினி முறைமைகளில் (Expert Systems) சிக்கலைத் தீர்ப்பதற்கான ஒரு வழி முறை. இம்முறையில் வரை யறுக்கப்பட்ட விதிமுறைகள் ஒரு புறம். மெய்ம்மையான விவரங்கள் அடங்கிய தரவுத்தளம் இன்னொரு புறம். இரண்டிலும் தொடங்கி, இறுதியில் தரவுத்தள விவரங்களின் அடிப்படையில், விதிமுறைகளில் கூறப்பட்ட அனைத்து மெய்க்கூறுகளையும் நிறைவு செய்யும் வகையில் இறுதி முடிவு எட்டப்படும்.

forward compatible : முன்னோக்கு ஒத்திசைவு : 'மேல்நோக்கு ஒத்திசைவு' (Upward Compatible) என்பதும் இதுவும் ஒன்றே.

forward error correction : முன்னோக்குப் பிழைதிருத்தம் : ஏற்பு முனையில் தவறான தரவுகளைத் திருத்தக்கூடிய செய்தித் தொடர்பு உத்தி. அனுப்பீட்டுக்கு முன்பு, பிழைதிருத்தத்திற்காக கூடுதல் துண்மிகளைச் சேர்க்கிற ஒரு படிநிலை முறை மூலமாகத் தரவுகள் செய்முறைப் படுத்தப்படுகின்றன. அனுப்பப்படும் செய்தி பிழையுடனேயே வருமானால், அதைத் திருத்துவதற்குத் திருத்தத் துண்மிகள் பயன் படுத்தப்படுகின்றன.

forward pointer : முனோக்கிய குறிப்பி;முன்னோக்குச் சுட்டி : தரவு அமைப்பில் அடுத்த பொருளின் இருப்பிடத்தைக் கூறும் குறிப்பி.

FGSDIC : ஃபோஸ்டிக் : Film Optical Sen sing Device for input to Computers என்பதன் குறும் பெயர். நிரப்பப்பட்ட மக்கள் தொகை படிவத் தரவுகளைக் கணினிக்குள் செலுத்த மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அலு வலகம் பயன்படுத்தும் உள்ளீட்டுச் சாதனம்.

four address instruction : நான்கு முகவரி நிரல்;நான்கு முகவரி கட்டளை : முடிவுகளை வகைப்படுத்துவதற்கான முகவரி மற்றும் அடுத்து செயல் படுத்தவேண்டிய கட்டளைக்கான நிரல் மற்றும் பிற பட்டியல்கள் போன்ற இரண்டு இயக்கிகளின் முகவரிகளை வழக்கமாகக் கொண்டிருக்கும் எந்திர நிரல்.

fourier transform : ஃபூரியர் நிலைமாற்றம் : ஜீன் பாப்டிஸ்ட் ஜோசப் ஃபூரியர் (Jean Baptiste Joseph Fourier) : 1768-1830) என்னும் ஃபிரெஞ்சுக் கணித மேதை உருவாக்கிய ஒரு கணித