பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/623

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

four out of eight code

622

fourth generation language


வழிமுறை. அலைக்கற்றைப் பகுப்பாய்வு (Spectral Analysis), படிமச் செயலாக்கம் (Image Processing) போன்ற சமிக்கை உற்பத்திப் பணிகளிலும் ஏனைய சமிக்கைச் செயலாக்க முறைகளிலும் இக்கோட்பாடு பயன் படுத்தப்படுகிறது. ஃபூரியர் நிலைமாற்றம் ஒரு சமிக்கை உருவாக்க மதிப்பை நேரம் சார்ந்த செயல்கூறாய் (function) மாற்றுகிறது. தலைகீழ் ஃபூரியர் நிலைமாற்றம் அலைவரிசை சார்ந்த செயல்கூறினை நேரம், வெளி அல்லது இரண்டும் சார்ந்த செயல்கூறாய் மாற்றித் தருகிறது.

four out of eight code : எட்டில் நான்கு குறியீடு;எட்டில் நான்கு குறிமுறை : பிழை கண்டுபிடிப்பதற்கான குறியீடு.

fourth generation computers : நான்காம் தலைமுறை கணினிகள் : மிகப் பேரளவு ஒருங்கிணைப்பு தொழில்நுட்பத்தினால் உருவாக்கப்பட்ட இப்போது புழக்கத்தில் உள்ள இலக்கமுறை கணினிகள். விஎல்எஸ்ஐ தொழில்நுட்ப கணினிகள் என்றும் அழைக்கப்படுகின்றன.

fourth generation language : நான்காம் தலைமுறை மொழி : பயனா ளருக்குப் பெரிதும் உதவியாக இருக்கும் ஒர் உயர்நிலை மொழி. இதற்கு, மரபு முறையையும் சொற்றொடரியலையும் கண்டிப்பாகக் கடைப் பிடிக்க வேண்டிய அவசிய மில்லை. பெயர்ச் சுருக்கம் : 4GL வழக்கமான உயர்நிலை மரபு முறையையும் சொற்றொடரியலையும் விட மிக முன்னேறிய கணினி மொழி. எடுத்துக்காட்டாக தரவு தளத்தில், ஆனைப் பட்டியல், ஒரு தரவுக் கோப்பிலுள்ள அனைத்துப் பதிவேடுகளையும் காட்சியாகக் காட்டுகிறது. இரண்டாம், மூன்றாம் தலைமுறை மொழிகளில் ஒவ்வொரு ஏட்டினைப் படிக்கவும் கோப்பு முடிவைச் சோதிக்கவும், திரையில் ஒவ்வொரு தக

வலையும் காட்டவும், செய்முறைப்படுத்தும் பதிவேடுகள் காலியாகும் அச்செயற்பாட்டினைத் திரும்பத் திரும்பச் செய்யவும் கட்டளைகள் எழுதப்பட வேண்டும். முதல் தலைமுறை மொழிகள் எந்திர மொழிகள்;இரண்டாம் தலை முறை மொழிகள் எந்திரம் சார்ந்த ஒருங்கிணைப்பு மொழிகள். Fortran, Cobol, Basic, Pascal, C போன்ற மூன்றாம் தலைமுறை மொழிகள் உயர் நிலைச் செயல்முறைப்படுத்தும்