பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/624

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

fox message

623

frame


மொழிகள். dBASE, FoxBase, FoxPro போன்றவை நான்காம் தலைமுறைகள் என அழைக்கப்பட்டாலும், இவை உண்மையில் மூன்றாம், நான்காம் தலைமுறை மொழிகள் இணைந்தவை. dBASE list நிரல் என்பது நான்காம் தலைமுறை நிரல். ஆனால் இதில் செயல்முறைப் படுத்தப்பட்டுள்ள பயன்பாடுகள் மூன்றாம் தலைமுறையைச் சேர்ந்தவை. வினவு மொழியும், அறிக்கை எழுது கருவியுங்கூட நான்காம் தலைமுறையைச் சார்ந்தவை.

fox message : சாம்பல் பூத்த செய்தி : ஒவ்வொரு எழுத்தும் ஒரு முனை யத்தினால் சரியாக அனுப்பப்படுமாறு சரிபார்ப்பதற்கான ஒரு வாக்கிய எழுத்துருக்கள்.

FPLA : எஃப்பீஎல்ஏ : Field Programmable Logic Array என்பதன், குறும்பெயர். இது பயனாளர் நிரலாக்கத் தொடர் அமைக்கக்கூடிய பிஎல்ஏ. சாதாரண பிஎல்ஏ வை அரைக் கடத்தி உற்பத்தித் தொழிற் சாலையில்தான் நிரலாக்கத் தொடர் அமைத்து மாற்ற முடியும்.

fractals : ஃபிராக்டல்ஸ் : அண்மைக் காலத்தில் பெனோயிட் மண்டல் பிராட்டால், குறியீடு அமைக்கப்பட்ட கணிதத் துறையின் ஒரு பிரிவு. கணினி வரைகலையியல் பயன்பாடுகளில், சில தரவு புள்ளிகளில் இருக்கும் சிக்கல்களில் இருந்து ஒற்றுமையைக் கொண்டுவரும் தொழில் நுட்பம் தொடர்பானது.

fractional TI : பின்ன டீ1 : டீ 1 தடத்துக்கான ஒரு பகிர்மான இணைப்பு. 24 T1 குரல் மற்றும் தரவுத் தடங்களின் ஒரு பகுதி மட்டுமே பயன்படுத்தப் படுகிறது.

fragmentation : சிதறிக் கிடத்தல்;துண்டாக்கல் : முதன்மை நினைவகத் தின் அனைத்துப் பகுதிகளிலும் பயன்படுத்தப்படாத இடம் திட்டு, திட்டாக இருத்தல்.

frame : சட்டம்;திரைக்காட்சி : 1. ராஸ்டர் ஸ்கேன் காட்சி அலகில் ஒரு முழு ஸ்கேன் உருவாக்கும் ஒளிக்காட்சி (வீடியோ) தோற்றம். 2. முதல் பரப்பில் பதிவாகும் நிலை. காகிதம் அல்லது காந்த நாடா செங்குத்தாக நகரும்போது ஒரு முறை பதிவாகும் குறுக்குவெட்டு அகலம். ஒரு திரைக் காட்சியில் மாறுபட்ட பதிலிடு நிலைகளின் மூலம் பல துண்மி அல்லது துளையிடும் நிலைகளை உருவாக்க முடியும்.