பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/626

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

frame relay assembler

625

free BSD


பீடு செய்வதற்கு உதவுகிற அதிவேகப் பையடக்க விசை. இது, குரலைவிட தரவுகளுக்கும் உருக்காட்சிகளுக்கும் பொருத்தமானது.

frame relay assemblers/disassembler : சட்டத் தொடர்பி தொகுப்பான்/பிரிப்பான் : தடச்சேவை சாதனம் (Channel Service Unit-CSU), இலக்க முறைச் சேவை சாதனாம் (Digital Service Unit-DSU), பிணையத்தை சட்டத் தொடர்பியுடன் இணைக்கும் திசைவி (router) ஆகிய மூன்றும் இணைந்தது. இச்சாதனம், சட்டத் தொடர்பிப் பிணையங்களில் தகவலைப் பொட்டலங் களாக மாற்றி அனுப்பி வைக்கும். மறுமுனையிலிருந்து இது போல அனுப்பப்படும் பொட்டலங்களைச் சேர்த்து மூலத் தகவலாக மாற்றும். இம்முறையில் தீச்சுவர் (Firewall) போன்ற பாதுகாப்பு ஏற்பாடுகள் எதுவும் கிடையாது. எனவே, தனியாக பிணையப் பாதுகாப்பு செயல் முறை சேர்க்கப்பட வேண்டும்.

frame source : சட்ட மூலம் : ஹச்டிஎம்மில் சட்டச் சூழலில், ஒரு பொருளடக்க ஆவணம் மூல ஆவணத்தைத் தேடி, பயனாளர் கணினி யிலுள்ள உலாவி வரைந்துள்ள ஒரு சட்டத்துக்குள் காண்பிக்கும்.

frame work : வரைச் சட்டம் : பொருள்சார் செயல்வரைவு அடிப்படையில், பயன்பாடுகளை உருவாக்குவதற்கான பொதுவானதொரு துணைப் பொறி யமைவு வடிவமைப்பு. இது அருவ வகைப்பாடுகளையும், உருவ வகைப் பாடுகளையும் கொண்டது. பொருள்சார் செயல்வரைவு முறை மென் பொருள் மறுபயன்பாட்டுக்கு உதவுகிறது. வரைச்சட்டங்கள், வடிவமைப்பு மறுபயன் பாட்டுக்கு உதவுகிறது.

franz lisp : ஃபிரான்ஸ் லிஸ்ப் : பெர்க்கியிலுள்ள கலிஃபோர்னியாப் பல்கலைக்கழகம் தயாரித்துள்ள LISP-இன் ஒரு பதிப்பு.

fred : ஃபிரெட் : 1. எக்ஸ் 500-க்கான ஒர் இடைமுகப் பயன்நிரல். 2. கட்டளைத் தொடர் எடுத்துக்காட்டுகளில் ஒரு மாறிலியின் பெயருக்காக நிரலர்கள் பலராலும் பயன் படுத்தப்படும் ஒரு சொல். ஒரு நிரலர் ஏற்கெனவே ஃபிரெட் என்னும் சொல்லைப் பயன் படுத்தியிருந்தால் இன்னுமொரு மாறிலியின் பெயர் இடம் பெறுமிடத்தில் பார்னே (Barnay) எனக் குறிப்பிடுவர்.

free BSD : இலவச பிஎஸ்டி : ஐபிஎம் ஒத்தியல்புக் கணினிகளுக்காக இலவசமாக வெளி