பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/627

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Freedom of Information Act

626

free of cost


யிடப்பட்ட பிஎஸ்டி யூனிக்ஸ் பதிப்பு. பெர்க்கிலி சாஃப்ட் வேர் டிஸ்ட்ரி பூஷன் என்பதன் சுருக்கமே பிஎஸ்டி எனப்படுவது. கலிஃபோர்னியாவிலுள்ள பெர்க்கிலி பல்கலைக் கழகத்திலுள்ள பிஎஸ்டி அமைப்பு யூனிக்ஸ் இயக்க முறைமையை வளர்த்தெடுத்ததில் முக்கிய பங்கு வகித்தது. இன்றைக்கு யூனிக்ஸின் அங்கமாக இருக்கும் பல்வேறு சிறப்புக் கூறுகளும் பிஎஸ்டி யால் உருவாக்கப்பட்டவை.

Freedom of Information Act : தரவு சுதந்திரச் சட்டம் : (அமெரிக்க) ஐக்கிய அரசின் அமைப்புகள் தொகுக்கும் தரவுகளை சாதாரண மக்கள் பெறுவதற்கு அனுமதிக்கும் ஐக்கியச் சட்டம்.

free form : தாராள வடிவம் : தரவு நுழைவு சமயத்தில் உள்ளீட்டுச் சாதனங்களின் மூலம் நுழைக்கப்படும் குறியீடுகளால் கட்டுப்படுத்தப்படும் ஸ்கேனிங், இயக்கம்.

free-form database : வடிவற்ற தரவுத் தளம் : நீளம் அல்லது ஒழுங்க மைவினைப் பொருட்படுத்தாமல் வாசகத்தைப் பதிவு செய்வதை அனு மதிக்கிற தரவுத்தளப் பொறியமைவு. இது சொல்பகுப்பியை ஏற்றுக்கொண் டாலும், தேடுதல், மீட்பு, தரவு சீரமைப்பு ஆகியவற்றுக்கு சிறந்த முறைகளை அளித்து வேறுபடுகிறது.

free-form language : வடிவற்ற மொழி;சுதந்திர வடிவ மொழி;கட்டறு வடிவ மொழி : கட்டளைத்தொடர் ஒரு வரியில் எந்த இடத்திலும் தொடங்கலாம். கட்டளைச் சொற்கள் ஒரு வரியின் எவ்விடத்திலும் இடம் பெறலாம் என்று அமைந்துள்ள மொழி. சி மற்றும் பாஸ்கல் மொழிகள் இவ்வகையைச் சார்ந்தவை. ஃபோர்ட்ரான், கோபால் மொழிகள் அவ்வாறில்லை. கட்டளைச் சொற்கள் வரியின் குறிப்பிட்ட இடத்தில் தொடங்க வேண்டும் என்கிற கட்டுப்பாடுகள் உண்டு.

free-form text chart : தாராள வடிவ உரை நிரல் படம்.

free Hand : தாராளச் செயல் முறை : அல்டஸ் கார்ப்பரேஷன் என்ற அமைவனம் தயாரித்துள்ள முழு அம்சங்களும் கொண்ட வரைபடச் செயல் முறை. இதில் பல்வேறு வரைவுக்கருவிகள் தனி உத்திகளுடன் இணைக்கப் பட்டுள்ளன.

free net : இலவச வலையம்.

free of cost : செலவில்லாமல்.