பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

allocation block size

62

alphabetic



allocation block size : ஒதுக்கீட்டுத் தொகுதி அளவு : நிலை வட்டுப் போன்ற சேமிப்பு ஊடகங்களில் ஒரு தனிப்பட்ட தொகுதியின் கொள்ளளவு. வட்டின் மொத்தக் கொள்ளளவு மற்றும் பாகப்பிரிவுகளின் அடிப்படையில் இந்தத் தொகுதி அளவு தீர்மானிக்கப்படுகிறது.


allocation table : ஒதுக்கீட்டு அட்டவணை.


allow zero length : வெற்றுச் சரம் அனுமதி


ALOHA : அலோஹா : செயற்கைக்கோள் தரவுத் தொடர்புகளில் அமெரிக்காவில் முதன் முதலில் பயன்படுத்தப்பட்ட தரவுத் தொடர்பு நெறிமுறை (Protocol).


all points addressable : அனைத்துப் புள்ளி முகவரியிடல் : ஒரு திரையிலுள்ள ஒவ்வொரு படப்புள்ளியையும் தனித்தனியாக முகவரியிடக் கூடிய ஒரு வரைகலை முறை.


all purpose computer : அனைத்துச் செயல் நோக்குக் கணினி.


Alpha : ஆல்ஃபா : டிஜிட்டல் எக்யூப்மென்ட் கார்ப்பரேஷன் (DEC) ரிஸ்க் (RISC) தொழில் நுட்ப அடிப்படையில் உருவாக்கிய 64-துண்மி (64-பிட்) துண்செயலியின் வணிகப் பெயர். 1992 பிப்ரவரியில் டெக்சிப் 21064 என்ற பெயரில் விற்பனைக்குக் கொண்டு வந்தது. டெக் நிறுவனத்தின் சிப்புத் தொழில் நுட்பததையும் இப் பெயர் குறிக்கிறது. சில வேளைகளில் ஆல்ஃபா சிப்பு பொருத்தப்பட்ட கணினியை ஆல்ஃபா அடிப்படையிலான கணினி எனக் கூறுவர்.


Alpha AXP : ஆல்ஃபா ஏஎக்ஸ்பீ : டெக் நிறுவனத்தின் 64-துண்மி (64-பிட்) ரிஸ்க் சிப்பின் தொழில் நுட்பம் இவ்வாறு அழைக்கப்பட்டது. டெக் நிறுவனம் தான் உற்பத்தி செய்த சொந்தக் கணினிகள் டெக் சிப்பினைக் கொண்டுள்ளன என்பதைக் குறிக்க ஏஎக்ஸ்பீ என்னும் பெயரைக் குறிப்பிட்டது.


alphabet : அகரவரிசை : 1. ஒரு மொழியிலுள்ள எழுத்துகள். 2. ஒரு கணினி மொழியைப் பொறுத்தவரை பல்வேறு வகையான எழுத்துகள், எண்கள், நிறுத்தற் குறிகள் மற்றும் பிற சிறப்புக் குறியீடுகளும் பயன் படுத்தப்படுகின்றன. அவற்றுள் அகர வரிசை ஒர் உட்குழுவாகும்.


alphabetic : எழுத்துக் கோவை : எழுத்துகள் மற்றும் சிறப்புக் குறியீடுகளைக் கொண்ட தரவுகள்