பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/630

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

frequency response

629

friction feed


வட்டில் தகவலைப் பதிவதில் பின்பற்றப்படும் ஒரு வழிமுறை. தகவல் மற்றும் கடிகாரத் துடிப்புகள் எனப்படும் ஒத் திசைவுத் தகவலும் (Synchroni. cing information) வட்டின் மேற்பரப்பில் பதியப்படுகிறது. கடிகாரத் துடிப்பு களும் வட்டில் பதியப்படுவதால் அதிகமான வட்டுப்பரப்பு தேவைப்படுகிறது. எனவே எஃப்எம் குறியீட்டு முறை பிறமுறைகளோடு ஒப்பிடுகையில் திறன் குறைந்ததாகக் கருதப்படுகிறது. இப்போது இதைவிடச் சிறந்த முறைகளும் உள்ளன. திருத்தப்பட்ட அலைவரிசைப் பண்பேற்றக் குறியீட்டுமுறை (Modified Frequency Modulation Encoding-MFM) என்பது அவற்றுள் ஒன்று. தொடர் நீள வரம்பு (Run Length Limited- RLL) குறியீட்டு முறை சற்றே சிக்கலானது. ஆனால் எல்லா வற்றையும்விட மிகச்சிறந்த குறியீட்டுமுறை எனக் கருதப்படுகிறது.

frequency response : அலைவரிசைப் பிரதிபலிப்பு : ஒரு கேட்பொலி சாதனம், குறிப்பிட்ட உள்ளிட்டுச் சமிக்கைகளின் அடிப்படையில் உரு வாக்கி, வெளியீடாகத் தரும் அலைவரிசைகளின் வரம்பு.

frequency shift keying (FSK) : அதிர்வெண் மாற்றி விசையிடல் : தரவு அனுப்பு முறை. இதில் அனுப்பப்படும் 'துண்மி'யின் நிலை கேட்கும் ஒலியால் உணர்த்தப்படும்.

frequency spectrum : அலைக்கற்றை : ஊர்தி மற்றும் அதிர் வெண் குறியீட்டு அலைவெண்களின் கூட்டுத்தொகை மேற்பக்க அலைவெண் எனப்படும். ஊர்திக்கும், அதிர்வெண் குறியீட்டு அலைவெண்களுக்கு மிடையிலான வேறுபாடு, கீழ்ப் பக்க அலைவெண் எனப்படும்.

frequency, ultra high : மீவுயர் அதிர்வலை.

friction feed : உராய்வு செலுத்தி;உராய்வு அளிப்பு;உராய்வு வழி ஊட்டல் : அச்சுப் பொறிக்குள் தாளைச் செலுத்தும் ஒரு முறை. பொதுவாக, இரு புறமும் துளையிடப்பட்டதாள் இரு பல்சக்கரங்களின் மேல் இடப்ப்ட்டு, சக்கரங்கள் சுழலும்போது நகர்த்தப்படும். ஆனால் சில அச்சுப்பொறிகளில் தட்டுகளில் தாள்கள் வைக்கப்பட்டு அதன்மீது சுழலும் அழுத்த உருளை (Pressure Roler) மூலமாக நகர்த்தப்படும். இன்னும் சிலவற்றில் சுழலும் இரு உருளைகளுக்கு இடையில் உட்