பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/632

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

front end processor

631

full adder


மாய்ச் செயல்படும் மென்பொருளைக்காட்டிலும் மிகவும் தோழமையான ஒர் இடை முகத்தை பயனாளருக்கு வழங்கும். வெவ்வேறு தயாரிப்பாளர்களின் மென்பொருள் படைப்புகளுக்கும் ஒரே மாதிரியான இடைமுகத்தை முன் னிலைக் கருவிகள் வழங்குகின்றன. 2. வழங்கன் கணினியில் சேமித்து வைக்கப்பட்டுள்ள தரவுத் தளம் பின்னிலை (Back End) என்றும், கிளையன் கணினிகளில் செயல்படும் பயன்பாட்டுத் தொகுப்புகளின் முன்னிலைக் (Front End) கருவி என்றும் அழைக்கப்படுகின்றன. (எ-டு) ஆரக்கிள் பின் னிலைத் தரவுத் தளம். விசுவல் பேசிக், டெவலப்பர் 2000 ஆகியவை முன்னிலைக் கருவிகள்.

front end processor : முன்னணிச் செயலகம்.

front end tool : முன்னிலைக் கருவி.

front panel : முகப்புப் பலகம் : கணினிப் பெட்டியில் அதன் இயக்கு விசைகள், விளக்குகள், கட்டுப்பாட்டுக் குமிழ்கள் அடங்கிய முகப்புப் பட்டிகை.

fry : வறு : மிக அதிக வெப்பம் அல்லது மின்சாரம் செலுத்துவதன் மூலம் ஒரு மின் சுற்றினைப் பாழாக்குதல்.

fs : எஃப்எஸ் : femto second பதன் குறும்பெயர்.

FSK : எஃப்எஸ்கே : Frequency Shift Keying என்பதன் குறும் பெயர்.

FTP commands : எஃப்டீபீ கட்டளைகள் : கோப்புப் பரிமாற்ற நெறிமுறையின் (File Transfer Protocol) கட்டளைத் தொகுப்பு.

FTP server : எஃப்டீபீ சேவையகம்;எஃப்டீபீ வழங்கன்;Host-புரவன் : இணையம் வழியாகவோ அல்லது எந்தவொரு டீசிபி/ஐபி பிணையம் வழி யாகவோ, கோப்புப் பரிமாற்ற நெறிமுறையைப் (FTP) பயன் படுத்தி, பயனா ளர்கள் கோப்புகளை பதிவேற்ற அல்லது பதிவிறக்க அனுமதிக்கும் ஒரு கோப்பு வழங்கன் கணினி.

FTP site : எஃப்டீபீ தளம் : எஃப்டீபீ வழங்கன் கணினியில் சேமித்து வைக்கப்பட்டுள்ள கோப்புகள் மற்றும் நிரல்களின் தொகுப்பு.

full adder : முழுக்காட்டி மைக் கூட்டி : மூன்று இருமை துண்மிகளைத் தனித்தனியே உள்ளீடாகப் பெற்று அவற்றைக் கூட்டும் திறனுடைய கணினி மின்சுற்று. அவற்றில் ஒன்று முன்பு கூட்டப்பட்டதில் மீதியைக் கொண்டு செல்லும்.