பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/635

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

full version

634

function call


பகுதியையும் தேடி குறிப்பிட்ட தகவலைக் கண்டறிதல்.

full version : முழு பதிப்பு.

fully formed character : முழு வடிவ எழுத்து : அச்சுப்பொறிகளை தொட்டச்சுப்பொறி (Impact Printer), தொடா அச்சுப் பொறி (Non-Impact Printer) எனப் பிரிக்கலாம். புள்ளியணி அச்சுப்பொறிகள் (Dotmatrix Printers), டெய்சி சக்கர அச்சுப்பொறிகள் (Daisy Wheel Printers) ஆகியவற்றைத் தொட்டச்சில் சேர்க்கலாம். மையச்சு (Inkjet), ஒளியச்சு (Laser) பொறிகளை தொடா அச்சில் சேர்க்கலாம். புள்ளியணி அச்சுப்பொறியில், அச்சு முனை மைநாடாவில் மோதி தாளைத் தொட்டு அச்சிடு கின்றது. ஆனாலும் எழுத்துகள் புள்ளி களால் ஆனவை. ஆனால் டெய்சி சக்கர அச்சுப்பொறியில் எழுத்து வடி வங்கள் தட்டச்சுப் பொறியில் உள்ளது போல, அச்சுக்கூடத்தில் பயன் படுத்தும் எழுத்துகளைப்போல அச்சுருவில் வார்த்தெடுக்கப்பட்ட முழு வடிவ எழுத்துகளாக இருக்கும்.

fully populated : முழு இடவசதிப் பலகை : மிக அதிக எண்ணிக்கை யிலான சிப்புகளைச் செருகுவதற்கு இடவசதிகொண்ட ஒர் அச்சிட்ட சுற்று வழிப் பலகை.

fully populated board : முழுதும் நிரம்பிய பலகை : அச்சிட்ட மின்சுற்றுப் பலகை ஒருங்கிணை மின்சுற்றுப் பொருத்து வாய்கள் அனைத்திலும் ஒருங் கிணை மின்சுற்று (IC) -கள் பொருத்தப்பட்டிருக்கும். நினைவக பலகையில் பெரும்பாலும் சில ஐசி பொருத்து வாய்கள் மீதமிருக்கும். அதுபோன்ற பலகைகளை "முழுதும் நிரம்பாப் பலகைகள்" எனலாம்.

function : பணி;செயல்முறை;செயல்கூறு;சார்பு : 1. ஒரு மதிப்பினை உருவாக்கும் செயல் முறை. 2. செயலாக்கப்படும் வழக்கச் செயல். 3. ஒரு பெரிய செயல்திட்டத்துக்கு நிரலாக்கத் தொடர் வரையும்போது, அச்செயல் திட்டத்தை சிறுசிறு பணிக்கூறுகளாகப் பிரித்து, ஒவ்வொரு பணிக்கூறுக்கும் தனித்தனியே நிரலாக்கத் தொடர் அமைத்து, பின்பு ஒருங்கிணைத்து இயக் கலாம். ஒரு சிறிய பணிக்கூறு அல்லது செயல்கூறு ஃபங்ஷன் எனப்படு கிறது.

function call : செயற்பணி அழைப்பு : மையச் செயலகத்துக்கு (CPU) ஒரு செயற்பணியை ஏற்றி, நிறைவேற்று