பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/637

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

functional design

636

functional specification


functional design : செயல் பாட்டு வடிவமைப்பு : கணினி அமைப்பின் செயல்பாட்டு உறுப்புகளிடையே நிலவும் உறவுமுறை பற்றிய வரை யறுப்புகள். கருத்துரு சாதனங்களின் விவரங்கள் மற்றும் அவை இணைந்து செயல்படும் முறைகளும் இவற்றுள் அடக்கம். செயல்பாட்டு வடிவமைப்பு என்பது வரைகலை வடிவில் ஒரு செயல்பாட்டு வரைபடம் மூலம் விளக்கப் படும். கணினி அமைப்பின் பல்வேறு கூறுகளைக் குறிக்க தனிச்சிறப்பான குறியீடுகள் பயன்படுத்தப்படுகின்றன.

functional programming : செயல்கூறு நிரலாக்கம் : நிரலாக்கத்தில் ஒரு பாணி. நிரலின் அனைத்து செயல்பாடுகளும் தனித்தனி செயல்கூறுகளாக (Functions) அமைக்கப்பட்டிருக்கும். பொதுவாக, இதனால் பக்கவிளைவு எதுவும் ஏற்படாது. முழுமையான செயல்கூறு நிரலாக்க மொழிகளில் வழக்கமான மதிப்பிருத்து கட்டளை இருப்பதில்லை. நகலெடுத்தல், மாற்றம் செய்தல் ஆகிய செயல்பாடுகளின் மூலமாக மதிப்பிருந்தும் பணி நிறை வேற்றப்படுகிறது. இணை நிலை செயலாக்கக் (Parallel processing) கணின களில் செயல்கூறு நிரலாக்கம் மிகுந்த பலனைத் தரும் என்று கருதப் படுகிறது.

functional redundancy checking : செயல்பாட்டு மிகை சரிபார்ப்பு : ஒரு கணினிச் செயல்பாட்டில் நிகழும் பிழையைத் தவிர்ப்பதற்கான வழிமுறை. இதன்படி, கணினியில் இரண்டு நுண்செயலிகள் இருக்கும். அவையிரண்டும் ஒரே நேரத்தில் ஒரே விவரத்தின்மீது ஒரே கட்டளையைச் செயல்படுத்தும். இரண்டு நுண் செயலிகள் மூலம் கிடைக்கின்ற விடைகள் ஒன்றாக இருக் கின்றனவா என்று சரிபார்க்கப்படும். இல்லை எனில் பிழை ஏற்பட்டுள்ளது என்று பொருள். இன்டெல் நிறுவனத்தின் பென்டியம் மற்றும் அதற்கு மேம்பட்ட நுண்செயலிகளில் செயல்பாட்டு மிகை சரிபார்ப்பு முறை உள்ளி ணைந்த ஒன்றாகும்

functional specification : செயல்பாட்டு வரையறுப்பு : ஒரு தரவு கையாளும் அமைப்பு முறையை உருவாக்கும்போது கணக்கில் எடுத்துக் கொள்ளவேண்டிய நோக்கங்கள், நடவடிக்கைகளின் வகைகள்-இவற்றைப் பற்றிய ஒரு விளக்கம்.