பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/638

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

functional units

637

fuzzy logic


functional units : செயல்படு உறுப்புகள்.

functional units of a computer : ஒரு கணினியின் பணிமுறை அலகுகள் : இலக்கமுறை கணினிகளில் கணித தருக்க அலகு, சேமிப்பக அலகு, பாட்டு அலகு, உள்ளீடு மற்றும் வெளியீட்டுச் சாதனங்கள்.

function subprogramme : துணை நிரல் செயல்கூறு;பணி நிரலாக்கத் தொடர் : ஒரு தனி மதிப்பு முடிவினைத் திருப்பி அனுப்பும் துணை நிரலாக்கத் தொடர்.

funware : விளையாட்டுப் பொருள் : நிறுவனப்பொருளில் உள்ள விளையாட்டு நிரலாக்கத் தொடர்.

fuse : உருகி : அளவுக்கு மேலான சுமை ஏற்றப்படும் போது ஒரு மின்சுற்றினைத் துண்டிக்கும் பாதுகாப்பு தற்காப்புச் சாதனம். உருகிக்கு மேலே உள்ள மின்னோட்டம் உருகியின் இணைப்பினை உருகவைத்து மின் சுற்றினைத் துண்டிக்கும். மின்சாரம் அளவுக்கு அதிகமாகப் போவதைத் தடுத்து கருவியைப் பாதுகாக்க பெரும்பாலான கணினிச் சாதனங்களில் இது பயன்படுத்தப்படுகிறது.

fused-on toner : உருக்கு விசை : ஒர் ஊர்தி உருமணி, ஒளிக் கடத்தி அல்லது வன்பொருள் போன்ற செய்முறைப்படுத்தும் பொருளுடன் இணைப்பதற்குத் தேவைப்படும் அளவுக்குச் சூடாக்கப்படும் உருக்கு விசை.

fush : ஃபுஷ் : 1. ஒரு இருப்பகத்தில் இருக்கும் உள்ளடக்கங்களில் ஒரு பகுதியைக் காலி செய்தல். 2. எழுத்துகளை வரி, வரியாக அமைக்கும் போது இடது பக்கமாகவோ அல்லது வலது பக்கமாகவோ அமைத்தல்.

fusible link : சங்கமிக்கும் இணைப்பு : பரவலாகப் பயன் படும் நிரலாக்கத் தொடரமைப்புத் தொழில் நுட்பம். அதிக மின்சக்தியைப் பயன்படுத்தி ஒரு சேமிப்பகச் சாதனத்தில் உலோக இணைப்பைத் துண்டித்து '0'வை உருவாக்குவது. கடத்தும் பொருளை 1 ஆகக் கருதுவது.

fuzzy logic : மங்கல் : கணினி மூலம் ஒரு தரவை 0, 1 களின் தொகுதியாக மாற்றும்போது சில வேளைகளில் தரவுகளின் துல்லியத் தன்மை கெட்டு விடுகிறது. துல்லியம் தேவைப் படுகின்ற தரவுகளை,

0-வுக்கும் 1-க்கும் இடைப்பட்ட நிலைகளையும் கணக்கில் எடுத்துக்