பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/639

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

fuzzy search

638

FΥΙ


கொண்டு, கணினி முறைக்கு மாற்றும் தருக்க முறை.

fuzzy search : மங்கல் தேடுதல் : தேவையான தரவுகளுக்கு மிக நெருக்கமான தரவுகளைத் தருகிற வகையில் தரவுககளைத் துல்லியமின்றித் தேடுதல்.

fuzzy set : மங்கல் தொகுதி : ஒரு தொகுதித் தேற்றத்தில் அனைத்துக் கும் அல்லது எதற்கும் பதிலாக பல்வேறு அளவு தொகுதி உறுப்பாண் மைக்கு அனுமதிக்கிற ஒரு பொதுமுறை.

fuzzy theroy : மங்கல் தேற்றம் : கணினியில் செய்முறைப் படுத்து வதற்கு இடமளிக்கும் வகையில் தரவுகளையும், மனிதரின் பகுத்தறிவையும் குறிப்பாக குறிப்பதற்கு வடிவமைக்கப்பட்டுள்ள தருக்க முறையின் ஒரு பிரிவு.

. tx : . எஃப்எக்ஸ் : இணையத்தில், ஃபிரான்ஸ் பெருநகரைச் சேர்ந்த இணைய தளம் என்பதைக் குறிக்கும் பெரும் புவிப் பிரிவுக் களப்பெயர்.

FYI : எஃப்ஒய்ஐ : 1. தங்களின் மேலான கவனத்துக்கு என்று பொருள் படும் For Your Information என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். மின் அஞ்சலிலும் செய்திக் குழுக்களிலும், படிப்பவர்க்குப் பயன் படக்கூடிய தரவுகளை அறிமுகப்படுத்தப் பயன்படுத்தப்படும் சொல். 2. கருத்துரைக் கான கோரிக்கை (Request For Comments-RFC) போல இன்டர்நிக் (InterNIC) வழியாக வழங்கப்படும் ஒரு மின்னணு ஆவணம். ஆர்எஃப்சி என்பது வன் பொருள்/மென்பொருள் தயாரிப்பாளர்களுக்கானது. ஆனால் எஃப். ஒய்ஐ என்பது இணையத் தர வரையறை அல்லது பண்புக் கூறு பற்றிப் பயனாளர்

களுக்கு விளக்குவதை நோக்கமாகக் கொண்டது.