பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/643

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

gated

642

gauss


யொற்றிச் செல்கிற முடிவுறுத்தப்பட்ட, வழக்குறுத்தப்பட்ட சிப்பு.

gated : வாயில் வழியாக அனுப்புகை;நுழைத்தல்;உட்செலுத்தல் : 1. ஒரு மின்னணு மின்சுற்றுத் தொகுதியில் ஒரு தருக்கமுறை உறுப்பிலிருந்து அடுத்த உறுப்புக்கு ஒரு வாயில் (gate) வழியாகத் தரவு செலுத்தப் படுதல். 2. ஒரு பிணையம் அல்லது சேவையிலுள்ள தரவு இன்னொரு பிணையம் அல்லது சேவைக்கு ஒரு நுழைவி (gateway) வழியாக அனுப்பப்படுதல். (எ-டு) பிட்நெட் (BITNET) போன்ற ஒரு பிணையத்திலுள்ள அஞ்சல் பட்டியல், இணையத்திலுள்ள ஒரு செய்திக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்படுதல்.

gate, NAND : இல் உம் வாயில்.

gate, NOR;இல் அல்லது வாயில்.

gate, OR : அல்லது வாயில்.

gateway : நுழைவாயில் : நுழைவாயில் பாதை : இரண்டு வேறுபட்ட தகவல் தொடர்பு பிணையங்களை ஒன்றாகச் சேர்த்து இணைக்கும் கணினி. ஒரு உள்ளூர்ப் பிணைய கணினி அமைப்பு மற்றொரு உள்ளுர்ப் பிணைய கணினி அமைப்புடன் தகவல் தொடர்பு கொண்டு தரவுகளைப் பங்கிட்டுக் கொள்ளும் வகையில் இது பயன்படுத்தப்படுகிறது.

gather : வரிசை ஆணை : சில தரவு மொழிகளில் பதிவேடுகளை ஒரு வரிசையில் படிப்பதற்கான ஒரு நிரல்.

gathering, data : தரவு சேகரிப்பு.

gather write : விசை ஆணை எழுத்து : அடுத்தடுத்து, அமைந்திராத இரண்டு அல்லது அவற்றுக்கு மேற்பட்ட நினைவக அமைவிடங்களிலிருந்து ஒரே எழுத்துச் செயல்பாடு மூலம் தரவு வெளிப்பாடு செய்தல்.

gating circuit : வாயிலமைக்கும் மின்சுற்று : வாயில் மின்சுற்று : தேர்ந்தெடுக்கும் பொத்தானாக இயங்கும் மின்சுற்று. குறிப்பிட்ட கால இடைவெளிகளின் போது அல்லது சமிக்கையின் அளவு குறிப்பிட்ட எல்லைகளுக்கிடையில் இருக்கும் போது மட்டும் மின்சாரம் கடத்தப்பட இந்த மின்சுற்று அனுமதிக்கும்.

gauges : அளவிடு கருவி.

ga. us : ஜிஏ. யு. எஸ் : அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலத்தைச் சேர்ந்த இணையதளத்தைக் குறிக்கும் புவிப்பிரிவுப் பெருங்களப் பெயர்.

gauss : காஸ் : காந்த ஆற்றலை அளவிடும் அலகு.