பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/645

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

gender changer

644

generalized programme


பாலினத்தைத் தலைகீழாக மாற்றுகிற ஒரு சிறிய மின்னிய இணைப்பி. (ஆண் பெண்; பெண் ஆண்).

gender changer : இனம் மாற்றி : இரண்டு நுழையிணைப்பி (Male connector) அல்லது இரண்டு

துளை இணைப்பி (Female connector) முனைகளை இணைத்து வைக்கப் பயன்படும் ஒர் இடையிணைப்பி.

genera : ஜெனரா : ஒரு மொழி உருவமைவிலிருந்து இன்னொரு மொழிக்குத் தரவுகளை மாற்றுவதற்குப் பயன்படுத்தப் படுகிற ஒரு தரவு மாற்று மென்பொருள்.

general : பொது.

general field : பொதுப்புலம்.

general format : பொது உருவமைவு : "லோட்டஸ் 1-2-3" என்ற விரிதாள் செயல்முறையை உருவாக்குவதற்கான உருவமைவு.

generality : பொதுவான தன்மை; பொதுமை : ஒரு பொதுவான தேவை உள்ள பல தரப்பட்ட பயனாளருக்குப் பயன்படும் வகையில் சிக்கல்களுக்குத் தீர்வளிக்கும் கணினி நிரலாக்கத் தொடர் பற்றியது. சம்பளப் பட்டி நிரலாக்கத்தொடர் இதற்கு ஒரு சிறந்த எடுத்துக் காட்டு. கணக்கிடப்பட்ட நிகர சம்பளம் குறிப்பிட்ட அளவுக்கு மேலே போனால் இதில் ஒரு எச்சரிக்கை சமிக்கை வரும். குறைந்த பொதுத்தன்மை கொண்ட நிரலாக்கத்தொடர் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குட்பட்டிருக்கும். பொதுத் தன்மை உள்ள நிரலாக்கத்தொடர் ஒவ்வொரு தனிப்பட்ட பயனாள ரும் தனது எல்லை மதிப்பைக் குறிப்பிட வேண்டும் அல்லது எச்சரிக்கை தரும் முறையை மொத்தமாக நிறுத்திவிட வேண்டும்.

generalization : பொது வடிவமாக்குதல்.

generalized programme : பொதுமையாக்கிய செயல்முறை : ஒரு மாறுகிற சுழலுக்கு உதவிபுரிகிற