பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/646

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

generalized routine

645

general-purpose language


மென்பொருள். இது, மாறியல் செய்திக் குறிப்புகளைப்புகுத்த அனுமதிப்பதன் மூலம், இந்தச் செயல்முறை, பல்வேறு பயனாளருக்காக அல்லது சூழ்நிலைகளுக்காக ஒரு சிக்கலுக்குத் தீர்வு காண்கிறது.

generalized routine : வாலாயமான பொதுச் செயல்முறை : ஒரு குறிப்பிட்ட வகையான பயன்பாட்டுக்குள் பரந்த எல்லையுடைய பணிகளைச் செய்யுமாறு வடிவமைக்கப்பட்ட வழக்கச் செயல்முறை.

general protection fault : பொதுப் பழுதுக் காப்பு : 80386 அல்லது அதனினும் மேம்பட்ட செயலி, பாதுகாக்கப்பட்ட முறையில் இயங்கிக் கொண்டிருக்கும்போது (காட்டாக விண்டோஸ் 3. x/9x இயக்கத்தில்), ஒரு பயன்பாட்டு நிரல், வரம்புமீறி நினைவகத்தை அணுக முற்படும்போது ஏற்படுகின்ற பிழைநிலை. தலைப்பெழுத்துக் குறும்பெயர் ஜி. பீ. எஃப் (GPF).

general public license : பொதுமக்கள் உரிமம்.

general-purpose (GP) : பொது நோக்கம் : பொதுநோக்கு : மாற்றங்கள் செய்யத் தேவையின்றியே பலதரப்பட்ட பயன்பாடுகளுக்கு செயல்படக்கூடியது. Special Purpose மற்றும் dedicated என்பதற்கு எதிர்ச்சொல்.

general-purpose computer : பொது நோக்கக் கணினி பல வகையான சிக்கல்களைத் தீர்க்கும் வகையில் உருவாக்கப்படும் கணினி. பெரும்பாலான இலக்கமுறை கணினிகள் இந்த வகையைச் சேர்ந்தவை. Special Purpose Computer என்பதற்கு எதிர்ச்சொல்.

general purpose controller : பொதுப்பயன் கட்டுப்படுத்தி : பல்வேறு பயன்களுக்காக வடிவமைக்கப்பட்ட ஒருவகைக் கட்டுப்படுத்தி.

general purpose interface bus : பொதுப்பயன் இடைமுகப்பாட்டை : கணினிகளுக்கும் தொழிலகத் தானியக்கமாக்கக் கருவிகளுக்கும் இடையே தரவு பரிமாறிக்கொள்வதற்கு உருவாக்கப்பட்ட ஒரு பாட்டை. இந்தப் பாட்டையின் மின் வரையறை ஐஇஇஇ தரக் கட்டுப்பாட்டில் உள்ளிணைக்கப்பட்டுள்ளது.

general-purpose language : பொது நோக்க மொழி : பல விதமான சிக்கல்களுக்கும் தீர்வு காண்பதற்காகப் பயன்படுத்தப்