பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/648

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

generic

647

geographic information


generic : பொதுவாக : தொழில்பெயர் பற்றிய குறிப்பு இல்லாமல் அடுத்து வரப்போகும் பொருள் அல்லது சாதனம் பற்றியது.

generic icon : பொதுமைச் சின்னம் : மெக்கின்டோஷ் கணினித் திரையில் ஒரு கோப்பினை ஓர் ஆவணம் அல்லது ஒரு பயன்பாடாகக் காட்டும் ஒரு சின்னம். பொதுவாக, ஒரு பயன்பாட்டைச் சுட்டும் சின்னம் அப்பயன்பாட்டை உணர்த்துவதாகவும், ஓர் ஆவணத்தைச் சுட்டும் சின்னம் அவ்வாவணத்தைத் திறக்கும் பயன்பாட்டை உணர்த்துவதாகவுமே இருக்கும். பொதுமைச் சின்னம் தோன்றியுள்ளது எனில் மெக்கின்டோஷின் கண்டறி நிரல் குறிப்பிட்ட அப்பயன்பாடு பழுதடைந்து விட்டது என்பதை உணர்த்தும்.

generic model : பொதுவினைப் படிமம்.

GEnie : ஜெனீ : தகவல் பரிமாற்றத்துக்கான ஜெனரல் எலெக்ட்ரிக் பிணையம் என்று பொருள்படும் General Electric Network for Information Exchange என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஜெனரல் எலெக்ட்ரிக் இன்பர்மேஷன் சர்வீஸ் (General Electric Information Services) உருவாக்கிய ஒரு நிகழ்நிலை (online) தகவல் சேவை. வணிகத் தகவல் மேடை, வீட்டுக்கான பொருள் வாங்கல், செய்திகள் மற்றும் மின்னஞ்சல் பரிமாற்றம் போன்ற சேவைகளை ஜெனி வழங்குகிறது.

genlock (generator lock) ஜென்லாக் (உருவாக்கிப்பூட்டு)  : ஒளிப்பேழைக் குறியீடுகளைக் கலவை செய்வதற்காக ஒருங்கிணைக்கிற கற்றுநெறி. சொந்தக் கணினிகளில், ஓர் உருவாக்கிப்பூட்டுக் காட்சித் தகவமைவு, திரைக்காட்சியை NTSC ஒளிப்பேழைக் குறியீடுகளாக மாற்றுகிறது. இந்தக் குறியீட்டினை இது ஒரு புறநிலை ஒளிப்பேழை ஆதாரத்துடன் ஒருங்கிணைக்கிறது.

geocoding : நிலக்குறியீடு;நிலப்படக் குறிமுறை : ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதி தொடர்பான தரவுகளை வரைபடமுறையில் காட்சித்திரையில் வைப்பது.

geographic information system : புவியியல் தகவல் பொறியமைவு : புவியியல் தகவல்களைப் பகுப்பாய்வு செய்வதற்குப் பயன்படுத்தப்படும் மென்பொருள், வன்பொருள் இரண்டும் அடங்கிய ஒரு கணினிப்பொறியமைவு. எடுத்துக்காட்டு : இயற்கைவளப் பகிர்மானம்;நிலப்பயன்பாட்டு முறைகள்;