பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/649

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

geometry

648

geosynchronous


மக்கள்தொகைப் பரவல் போக்குகள். ஒரு புவியியல் தகவல் பொறியமைவு (CIS) என்பது ஒரு நேரடிப் பொறியமைவாக இருக்க வேண்டிய அவசியமில்லை. இது பெரும்பாலும் புறநிலை மற்றும் துணைநிலை ஆதாரங்களிலிருந்து தகவல்களை எடுத்துக்கொள்கிறது. நாட்டுப்படம் வரைதல், காலவரிசைப் பகுப்பாய்வு, புள்ளியியல் தரவுகள் ஆகியவை இதில் அடங்கும்.

geometry : வடிவக்கணிதவியல் : வடிவியல் பொருள்களின் வடிவுகள், திடப்பொருள்களின் அளவுகள், தரைப்பரப்புகள், கோடுகள், கோணங்கள் ஆகியவைகளைப்பற்றிக் கூறும் கணிதப்பிரிவு. கணினி வரைபடவியலில் ஒரு குறிப்பிட்ட பொருளின் உருவத்தை உருவாக்கும் வகையில் அமைக்கப்படும் கோடுகளின் அமைப்பு முறையைக் குறிப்பிடுகிறது.

geometry model : வடிவியல் படிமம்.

GeoPort : நிலத்துறை : மெக்கின்டோஷ் சென்ட்ரிஸ் 660ஏவி, குவாட்ரா 660ஏவி, குவாட்ரா 840 ஏவி அல்லது பவர்மேக் கணினிகளில் உள்ள அதிவேக நேரியல் (serial) உள்ளிட்டு வெளியீட்டுத் துறை. இந்தத் துறையில் எந்தவொரு மெக்கின்டோஷ் ஒத்தியல்பு நேரியல் சாதனத்தையும் இணைக்க முடியும். இத்துறைக்கென்றே உருவாக்கப்பட்ட வன்பொருள் அல்லது மென்பொருள் எனில், வினாடிக்கு 2 மெகாபிட் வரை தரவு பரிமாற்றம் செய்யமுடியும். குரல், தொலைநகல் கணினித் தரவு மற்றும் ஒளிக்காட்சி ஆகியவற்றைக் கையாளமுடியும்.

'GEOS : ஜியாஸ் : முன்னாளில் பெர்க்கிலி சாஃப்ட் ஒர்க்ஸ் என்றழைக்கப்பட்ட ஜியோ ஒர்க்ஸ் நிறுவனம் உருவாக்கிய இயக்க முறைமை (operating system) ஜியாஸ், ஒரு கச்சிதமான பொருள் நோக்கிலான வரைகலைப் பணிச் சூழல் வழங்கும் முறைமை ஆகும். ஆப்பிள், காமோடோர், எம்எஸ்-டாஸ் பணித்தளங்களில் இது செயல்படும்.

geosynchronous : புவியியல் இணைவமைவு : பூமியுடன் இணையமைவு செய்யப்பட்டிருத்தல். இது பூமத்திய ரேகையிலிருந்து 35, 888 கி. மீ. உயரத்தில் நிலைநிறுத்தப்பட்டு, பூமியின் சுழற்சி வேகத்தில் பயணம் செய்கிற செய்தித்தொடர்புச் செயற்கைக் கோள்களைக் குறிக்கிறது. இந்தச் செயற்கைக்