பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/650

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

geo works ensemble

649

. gi


கோள்கள் பூமியிலிருந்து பார்க்கும்போது நிலைபெற்றுள்ளனவாகத் தோன்றும்.

geo works ensemble : புவியியல் பணித் தொகுதி : 'ஜியோ ஒர்க்ஸ்' எனப்படும் அமைவனம் DOS-களுக்காகத் தயாரித்துள்ள வரைபடச் செயற்பாட்டுச் சூழல். எடுத்துக்காட்டு : சொல் செயலி : வரைதல்;செய்தித்தொடர்புகள் : அட்டைக்கோப்பு : நாட்டுக்குறிப்புப் பயன்பாடுகள். இது முழுமையான DOS மேலாண்மையை அளிக்கிறது.

germanium : ஜெர்மானியம் : சிப்புகளை, உற்பத்தி செய்வதில் பயன்படுத்தப்படும் இரசாயன மூலகங்கள் (அணு எண் 32).

GERT : ஜெர்ட் : Graphical Evaluation and Review Technique என்பதன் குறும்பெயர். கட்டமைப்பு அணுகுமுறையைப் பயன்படுத்தும் கணினிகளை மதிப்பிட விதிமுறைகளை ஏற்படுத்தும் செயல்முறை.

get : எழு : பெறு : உள்ளிட்டுக் கோப்பிலிருந்து ஒரு பதிவேட்டைப் பெறுதல். ஒற்று என்பதற்கு மற்றொரு பெயர்.

get external data : புறத்தரவு பெறு.

. gf : . ஜி. எஃப் : ஓர் இணையதளம் ஃபிரஞ்ச் கயானாவைச் சேர்ந்தது என்பதைச் சுட்டும் புவியியல் பெருங்களப்பெயர்.

g flops : ஜி ஃபிளாப்ஸ் : ஒரு நொடிக்கு ஒரு பில்லியன் பதின்மபுள்ளி இயக்கமுறைகள்.

. gh : ஜிஹெச் : ஓர் இணையதளம் கானா நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் புவியியல் பெருங்களப்பெயர்.

ghost நிழலுருவம் : 1. ஒரு கண்காட்சியில் அல்லது அச்சுப்பதிப்பில் அடிப்படை உருக்காட்சிக்கு நெருக்கமாகத் தோன்றுகிற மங்கலான இரண்டாவது உருக்காட்சி. கண்காட்சியில், இது பாஸ்ஃபோர் காரணமாக உண்டாகிறது. அனுப்பீட்டில், இரண்டாம் நிலைக்குறியீடுகளின் விளைவாக ஏற்படுகிறது. அச்சுப்படியில், காகிதம் நகரும்போது அச்சுக்கூறுகள் குறிப்பதால் உண்டாகிறது. 2. மங்கலான அச்செழுத்து முகப்பில், ஒரு பட்டியல் தெரிவினைக் காட்சியாகக் காட்டுதல். இது தற்சமயத்தில் தேர்ந்தெடுக்கத் தக்கதன்று என்பதைச் சுட்டிக்காட்டுகிறது.

. gi : ஜிஐ : ஓர் இணையதள முகவரி ஜிப்ரால்டர் நாட்டைச் சேர்ந்தது என்பதைச் சுட்டும் புவியியல் பெருங்களப்பெயர்.