பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/651

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

giant magneto resistive

650

gigahertz


giant magneto resistive : மீகாந்த எதிர்ப்பு : மிகப்பெரும் காந்த எதிர்ப்பு.

gibberish : பயனிலாத் தரவு;தேவையற்ற தரவு.

GIF : ஜிஐஎஃப் (வரைகலைப் பரிமாற்ற உருவமைவு) : 'கம்ப்யூசெர்வ்' எனப்படும் அமைவனம் உருவாக்கிய 'ராஸ்டர்' வரைகலைக் கோப்பு உருவமைவு. இது, 8 துண்மி வண்ணங்களை (256 வண்ணங்களை) கையாளக்கூடியது. ஏறத்தாழ 1. 5 : 1 அழுத்த விகிதங்களை 2 : 1 விகித அளவுக்குப் பெறுவதற்கு இது LZW முறையைப் பயன்படுத்துகிறது.

GIF animation : ஜிஐஎஃப் அசைவூட்டம்.

GIF animator : ஜிஃப் அனிமேட்டர் : அசைவூட்ட ஜிஃப் படிமங்களை உருவாக்க உதவும் ஒரு மென்பொருள்.

giga : கிகா109 : பில்லியன் அல்லது 10இன் 9 மடங்கு. ஜி என்று சுருக்கி அழைக்கப்படுகிறது.

gigabit : கிகா துண்மி : 1, 000, 000, 000 துண்மிகள். இதனை Gb, Gbit, G-bit, என்றும் கூறுவர்.

gigabit ethernet : கிகாபிட் ஈதர் நெட் : பொதுவாக ஈதர்நெட் செந்தரம் 802. 3ன் படி வினாடிக்கு 100 மெகாபிட் தரவுப் பரிமாற்றமே இயலும். ஆனால் ஐஇஇஇ-யின் 802. 32≥ தர வரையறைப்படி முன்னதைப்போல இருமடங்கு வேகம், அதாவது வினாடிக்கு ஒரு கிகாபிட் (IGpps) வேகத்தில் தரவுப்பரிமாற்றம் நடைபெறும். வழக்கமான ஈதர்நெட் செந்தரம் 802. 3 வினாடிக்கு 100 மீமிகு மெகா பிட் தரவுப் பரிமாற்றத்தை அளிக்கிறது.

gigabits per second : வினாடிக்கு ஒரு கிகாபிட் (ஜிபிபீஎஸ்) : பிணையத்தில் தரவுப் பரிமாற்ற வேகத்தைக் கணக்கிடும் அளவீடு. 1, 07, 37, 41, 824 (230), துண்மிகளின் (பிட்டுகள்) மடங்காக அளவிடப்படுகிறது.

gigabyte : கிகா எட்டியல் : 1, 000, 000, 000 எட்டியல்கள். இன்னும் துல்லியமாகக் கூறுவதாயின் 1, 073, 741, 824 எட்டியல் இதனை gb என்றும் கூறுவர்.

gigaflops : கிகாஃபிளாப்ஸ் : (வினாடிக்கு கிகா மிதவைப் புள்ளிச் செயற்பாடுகள்)  : ஒரு வினாடிக்கு 1, 000, 000, 000 பதின்மப் புள்ளிச் செயற்பாடுகள்.

gigahertz : கிகா ஹெர்ட்ஸ் : ஒரு நொடியில் ஒரு பில்லியன் தடவைகள். GHz என்று சுருக்கி