பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/652

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

GIGO

651

global operation


அழைக்கப்படுகிறது. மின்காந்த அலைகளின் வரிசையை அளக்கப் பயன்படுத்தப்படும் அலகு.

GIGO : (குப்பையிடக் குப்பை வரும்)  : Garbage In Garbage Out என்பதன் குறும்பெயர்.

glare : பிரதிபலிப்பு : கூசுதல்;கூசொளி : ஒரு காட்சித்திரையின் மேற்பரப்பிலிருந்து வரும் பிரதிபலிப்பு.

glare filter : கூசொளி வடிகட்டி : மேல்நிலை மற்றும் சுற்றுப்புற ஒளியின் கூசொளியைக் குறைப்பதற்கு CRT திரையின்மீது பொருத்தப்படும் ஒரு நுண்ணிய வலைப்பின்னல் திரை.

glitch : கோளாறு தடுமாற்றம் : வன்பொருளில் ஏற்படும் தற்காலிக அல்லது எதேச்சையான கோளாறு பற்றி குறிப்பிடும் பிரபல சொல். கூடுதல் மின்சக்தி மூலமும் இது ஏற்படுவதுண்டு. sang அல்லதுsnarl என்றும் அழைக்கப்படுவதுண்டு. Error என்பதற்கு மாறானது.

global : உலகளாவிய : முழுதளாவிய : முழுமையான : 1 : உள்ளூர் அளவில் என்று சொல்வதற்கு மாறாக மிகப்பரந்த எல்லை என்பதைக் குறிக்கும் பொதுச்சொல். 2. முதன்மை நிரலாக்கத்தொடர் மற்றும் அனைத்து துணைவாலாயங்களையும் அணுகக்கூடிய மாறிலியின் பெயர் பற்றியது.

global character : முழுதளாவிய எழுத்து : முழுமையான எழுத்துரு : தேடும் வாலாயத்தில் எந்த எழுத்தினையும் சார்ந்து நிற்கும் எழுத்து ஒரு குறிப்பிட்ட நீளமுள்ள எழுத்துச் சரங்களைத் தேட அதன் ஒருசில எழுத்துகளை மட்டும் பயன்படுத்தி உலகளாவிய எழுத்துகளை பிறவற்றுக்காக சார்ந்து நிற்றல். wild card என்றும் அழைக்கப்படும்.

global group : பரந்த குழு : விண்டோஸ் என்டி உயர்நிலை வழங்கன் அமைப்பில் பயனாளர் குழுவின் பெயர். ஒரு களப்பிரிவில் சிறப்புரிமை பெற்ற பயனாளர்களின் குழுவைக் குறிக்கிறது. இக்குழுவில் உள்ள பயனாளர்கள் தத்தம் களப்பிரிவில் மட்டுமின்றி அதற்கு வெளியிலுள்ள வளங்களையும், வழங்கன்களையும், பணிநிலையங்களையும் அணுகுவதற்கு அனுமதியும் உரிமையும். பெற்றவர்கள்.

global operation : முழுதளாவிய இயக்கம்; முழுமையான எழுத்துரு : சொல் செயலியில் ஒரு கோப்பு முழுவதும் செய்யப்படும் இயக்கம்.