பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/653

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

global positioning system

652

glue chip


global positioning system : உலக இருப்பிட விவரம்.

global search and replace : முழுதளாவிய தேடி மாற்று : முழுமையான தேடலும் மாற்றலும் : சொல் செயலியில் ஒரு ஆவணத்தில் எங்கிருந்தாலும் ஒரு சரத்தினை தேடி அதற்குப் பதிலாக வேறொரு சரத்தினைப் பொருத்துதல்.

global system for mobile communications : நடமாடும் தரவுத் தொடர்புக்கான உலகளாவிய முறைமை : பல்வேறு ஐரோப்பிய நாடுகள் உட்பட 60 க்கு மேற்பட்ட நாடுகளில் நடைமுறையிலுள்ள இலக்க முறை செல்பேசிக்கான தர வரையறை. தலைப்பெழுத்துச் சுருக்கமாக, ஜிஎஸ்எம் (GSM) என்று அழைக்கப்படுகிறன. ஜிஎஸ்எம் தரவுத் தொடர்பு அமைப்புகள் பரிசோதனை முறையில் அமெரிக்க நாட்டிலும் நிறுவப்பட்டுள்ளது.

global varible : முழுதளாவிய மாறி' : எங்கே அல்லது எந்த நிரலாக்கத் தொடரில் பயன்படுத்தப்ப்ட்டாலும் அதே மதிப்பைக் கொண்டிருக்கும் மாறியல் மதிப்புரு.

globally unique identifier : களாவிய தனித்த முத்திரை : மைக்ரோசாஃப்டின் காம்பொனன்ட் ஆப்ஜெக்ட் மாடல் (COM) தொழில்நுட்பத்தில், ஒரு பரந்த கணினிப் பிணையத்தில் பயன்படுத்தப்படும் ஒரு மென்பொருள் இனப்பொருளுக்கான இடைமுகத்தை அடையாளம் காண உதவும் 16-பிட் பெயர். பிணைய வழங்கன் கணினியிலுள்ள இடைமுக அட்டையின் பிணைய முகவரியையும், நேர முத்திரையையும் அப்பெயர் உள்ளடக்கியிருப்பதால், பிறவற்றிலிருந்து பிரித்துக் காணும் தனித்த முத்திரை கிடைக்கிறது. இத்தகைய முத்திரைகள் ஒரு பயன்பாட்டு நிரல் மூலம் உருவாக்கப்படுகின்றன.

global universal identification : பரந்த உலகளாவிய அடையாளம் : ஒரு குறிப்பிட்ட இனப்பொருளுக்கு ஒரேயொரு பெயரைச் சூட்டும் அடையாளத் திட்டம். வேறுவேறான பணித்தளங்களிலும் பயன்பாடுகளிலும் இப்பெயர் அடையாளங் காணப்படும்.

glue chip : ஒட்டுச் சிப்பு : ஒரு நுண்செயலியின் செயற்பணித் திறனை அதிகரிக்கிற துணைச் சிப்பு. எடுத்துக்காட்டு : I/O செய் செயலி அல்லது கூடுதல் நினைவகம்.