பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/654

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

glyph encoding scheme

653

go bottom


glyph encoding scheme : சிற்பக் குறியீட்டுத் திட்டம்.

. gm : ஜிஎம் : ஓர் இணையதள முகவரி காம்பியா நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் புவிப்பிரிவு பெருங்களப்பெயர்.

gn : ஜிஎன் : ஓர் இணையதள முகவரி கினியா நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

gnomon : நோமோன் : முப்பரிமாணப் பொருள் ஒன்றின் இருபரிமாண தோற்றத்தை விளக்க உதவும் வகையில் போக்கு மற்றும் பரிமாணத்தைக் குறிப்பிடும் பொருள்.

GNU : ஜிஎன்யு : ஜிஎன்யு என்பது யூனிக்ஸ் இல்லை என்று பொருள்படும் GNU's Not Unix என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். யூனிக்ஸ் இயக்கமுறைமையை அடிப்படையாகக் கொண்ட மென்பொருள்களின் தொகுப்பினை இவ்வாறு அழைப்பர். கட்டறு மென்பொருள் நிறுமம் (Free Software Foundation) இவற்றைப் பராமரித்து Free Software Foundation என்ற பெயரில் உள்ள Free என்ற சொல் இலவசம் என்ற பொருளில் பயன்படுத்தப்படவில்லை. சுதந்தரமான, கட்டுப்பாடற்ற என்ற பொருளிலேயே பயன்படுத்தப் படுகிறது. ஜிஎன்யு மென்பொருள்கள், ஜிஎன்யு பொதுமக்கள் உரிமம் (General Public License) அடிப்படையில் வழங்கப்படுகின்றன. இதன்படி, ஜிஎன்யு மென்பொருள்களை அல்லது அதனடிப்படையில் அமைந்த மென்பொருள்களை எவரும் விலைக்கு விற்கக் கூடாது. அவற்றை வழங்குவதற்கும், பராமரிப்பதற்கும் ஆகும் செலவுகளை மட்டும் விலையாகப் பெறலாம். அது போலவே, அவற்றை வாங்கும் பயனாளர் அந்த மென்பொருள்களில் மாற்றங்கள் செய்யலாம். மாற்றம் செய்யப்பட்ட மென்பொருளை ஜிஎன்யு உரிம நிபந்தனைகளின்படியே மற்றவர்க்கு வழங்க வேண்டும்.

goal seek : இலக்கு தேடு. விரி தாள் பயன்பாடுகளிலுள்ள ஒரு பயன்கூறு.

goal seeking analysis : நோக்கம் நாடும் பகுப்பாய்வு : தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாறியல் மதிப்புரு ஓர் இலக்கு மதிப்பளவினை எட்டும்வரை தேர்ந்தெடுத்த மாறிலிகளில் திரும்பத் திரும்ப மாறுதல்கள் செய்தல்.

go bottom : அடித்தளம் செல்க : ஒரு தளத்தின் அடிப்பகுதிக்கு